விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் |

கொரோனா தாக்கம், அதை தொடர்ந்த ஊரடங்கு காரணமாக சில மாதங்கள் தடைபட்டிருந்த ரஜினிகாந்தின் அண்ணாத்த படம், மீண்டும் ஐதராபாத்தில் துவங்கியபோது, படக்குழுவினர் சிலருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக மீண்டும் நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு, தற்போது ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இயக்குனர் சிவாவும் ரஜினியும் படப்பிடிப்பு தளத்தில் பேசிக்கொண்டு இருப்பது போல, , சில் அவுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளிஇட்டுள்ளது. ரஜினி அரசியலுக்கு வராமல் கடைசி நேரத்தில் தவிர்த்து ஏமாற்றம் அளித்தாலும், ஆரோக்கியமான உடல்நலத்துடன் தற்போது படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருவது குறித்து, ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.