துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ராஜமவுலி என்றாலே பிரமாண்டம் தான் என்று சொல்லும் அளவுக்கு அவர் உருவாக்கும் படங்கள் ரசிகர்களை பிரமிக்க வைக்கின்றன. பாகுபலி இரண்டு பாகங்களை பார்த்து வியந்த ரசிகர்களை, அடுத்தததாக ஆர்ஆர்ஆர் என்கிற படம் மூலம் புதிய உலகிற்கு அழைத்து செல்லும் முயற்சியில் இறங்கியுள்ள ராஜமவுலி அதில் 90 சதவீதம் படப்பிடிப்பை முடித்துவிட்டார்.
இன்னும் எடுக்கப்பட வேண்டியவற்றில் இரண்டு பாடல் காட்சிகள் மீதம் இருக்கின்றனவாம். அதில் ஜூனியர் என்திஆர், ராம்சரண் இருவரும் பங்கேற்கும் மிக பிரமாண்டமான பாடல் காட்சியும் ஒன்று.. சுதந்திர போராட்ட பின்னணியில் அமைந்துள்ள இந்தப்பாடல், நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை வைத்து படமாக்கப்பட இருக்கிறதாம். அதனால் இந்த பாடலை படமாக்குவதற்கு மட்டுமே ஒரு மாதம் ஒதுக்க திட்டமிட்டுள்ளாராம் ராஜமவுலி.