‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

கமல் நடிக்கும் படங்களின் பட்டியலில் ஏற்கனவே இந்தியன் 2 மற்றும் விக்ரம், என இரண்டு படங்கள் இடம் பிடித்திருக்க, அடுத்ததாக பாபநாசம்-2வில் நடிக்கிறார் என்றும், வெற்றிமாறன் டைரக்சனில் நடிக்கிறார் என்றும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனாலும் இந்த படங்களில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படம் மட்டும், முதலில் தயாராகி திரைக்கு வரும் சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. அதற்கேற்ற வகையில் லோகேஷ் கனகராஜும் அவ்வப்போது சில நடிகர்களை இந்தப்படத்தில் இணைத்து வருகிறார்.
இந்த படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் நடிக்க இருக்கிறார் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. சமீபத்தில் இந்த படத்தில் இணைந்திருக்கிறார் நடிகர் நரேன். இந்த நிலையில் இந்தப்படத்தில் மொத்தம் நான்கு வில்லன்கள் என்றும் பஹத் பாசில், நரேன் ஆகியோருடன், கூடவே விஜய்சேதுபதியும் கூட வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடிக்க இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் நரேன் கைதி படத்திலும், விஜய்சேதுபதி மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளதால், இவர்களை வில்லன் ஆக்குவதில் அவருக்கு பெரிய சிரமம் இருந்திருக்காது என்று நம்பலாம்.