தமன்னா கீ ரோலில் நடித்துள்ள 'ஓ ரோமியோ' ஹிந்தி படம் பிப்.,13ல் ரிலீஸ்! | ஜனவரி 15ல் திரைக்கு வரும் 'திரௌபதி- 2' படத்தின் டிரைலர் வெளியானது! | 'டாக்சிக்' படத்தில் நடிக்க 15 கோடி சம்பளம் வாங்கிய நயன்தாரா? | நடிகைக்கு ஷாக் கொடுத்த டிராகன் நடிகர் | கணவர் நடிகருடன் மல்லுக்கு நிற்கும் மனைவி நடிகை | ரஜினி வசனமும் நானும்! கண்ணா ரவியின் மகிழ்ச்சி | பிளாஷ்பேக்: அரசியல் நய்யாண்டி திரைப்படங்களின் ஆணிவேர் “முகமது பின் துக்ளக்” | காதலிக்க நேரமில்லை, முதல்வன், இட்லி கடை - ஞாயிறு திரைப்படங்கள் | 10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை |

சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார் ரஜினிகாந்த். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு வரும் ரஜினி, கடந்த மாதம் சிறப்பு அனுமதி பெற்று அமெரிக்கா சென்றார். அங்கு வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டதோடு ஓய்வு நேரத்தில் அங்குள்ள நண்பர்கள் இல்லங்களுக்கும் சென்று வந்தார். அதோடு ரசிகர்கள் சிலரும் அவரை சந்தித்து அவருடன் போட்டோவும் எடுத்து கொண்டனர்.
இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து இன்று சென்னை திரும்பினார் ரஜினி. அமெரிக்காவிலிருந்து கத்தார் வழியாக கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் அதிகாலை சென்னை வந்திறங்கினார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்கும் ரஜினி, அடுத்தப்படியாக அண்ணாத்த படத்தின் டப்பிங்கில் இறங்குகிறார். இதை முடித்ததும் அவரின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த படத்தை இளம் இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளாராம். இதற்கான ஆலோசனைகள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம்.




