இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு காரணம் இதுதான் : கங்கை அமரன் பரபரப்பு பேச்சு | நடிகை கஸ்தூரி பா.ஜ.,வில் இணைந்தார் | ‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி : 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் 'அதிசய' நாயகன் | 33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் | விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் | இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் |
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி என்ற திறமையான கதாநாயகன் அறிமுகமாவதற்குக் காரணமாக இருந்தவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் இயக்கிய 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் தான் கதாநாயகனாக உயர்ந்தார் விஜய் சேதுபதி.
அந்த 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் என்.ஆர்.ரகுநந்தன். அதன்பின் சீனு ராமசாமி இயக்கிய 'நீர்ப்பறவை' படத்திற்கும் இசையமைத்தார். அதற்கடுத்து அந்தக் கூட்டணி பிரிந்தது.
சீனு ராமசாமி அதற்குப் பிறகு இயக்கிய 'இடம் பொருள் ஏவல்' படத்தில் யுவன்ஷங்கர் ராஜாவுடன் கூட்டணி அமைத்தார். தொடர்ந்து 'தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன்' என யுவனுடன்தான் பயணித்தார் சீனு. 'மாமனிதன்' படத்திற்கு அப்பா இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கிறார் யுவன்.
இப்போது, அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சீனு ராமசாமி. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு மீண்டும் என்.ஆர்.ரகுநந்தனை இசையமைக்க வைக்கிறார். நான்கு பட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளனர்.
'மாமனிதன்' படத்தின் தயாரிப்பாளராகவும் இருக்கும் யுவனுக்கும், சீனுவுக்கும் அந்தப் படத்தில் பிரச்சினை என கிசுகிசுக்கிறது கோலிவுட். அதன் காரணமாகத்தான் மீண்டும் தன்னால் அறிமுகமான ரகுநந்தனை கூட்டணி சேர்த்துக் கொண்டுள்ளார் என்கிறார்கள்.