டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் |

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி உள்பட பலர் நடித்துள்ள சார்பட்டா பரம்பரை ஓடிடியில வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த படத்தில் நடித்துள்ள பல கேரக்டர்கள் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு 1970களில் வட சென்னையில் நடைபெற்று வந்த குத்துச்சண்டை கதையை தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார் ரஞ்சித்.
இந்நிலையில் இப்படத்தில் மாரியம்மாள் என்ற நாயகி வேடத்தில் நடித்துள்ள துஷாரா விஜயன் சார்பட்டா பரம்பரையில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து கூறுகையில், ரஞ்சித் சார் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தபோது யாரோ கிண்டல் செய்கிறார்கள் என்று நினைத்து விட்டேன். ஆனால் தொடர்ந்து17முறை அழைப்பு வந்தபோதுதான் அது உண்மையான போன்கால் தான் என்று தெரிந்தது. பின்னர் பா.ரஞ்சித்தின் அலுவலகத்திற்கு சென்று அவரிடத்தில் மன்னிப்பு கேட்டேன்.
அதையடுத்து என்னிடத்தில் மாரியம்மாள் கேரக்டர் பற்றி சொன்ன டைரக்டர், ஒரு காட்சியில் நடித்துக்காட்டுமாறும் கேட்டுக்கொண்டார். அதன்பிறகு போட்டோ சூட்டில் என்னை மாரியம்மாளாகவே மாற்றிய இயக்குனர், படத்திலும்அந்த கதாபாத்திரமாகவே வாழ வைத்து விடடார். அதற்காக பா.ரஞ்சித்துக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். சார்பட்டா பரம்பரை படத்திற்கும், எனது கேரக்டருக்கும் கிடைத்திருக்கும் வரவேற்பு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இப்படியொரு கேரக்டரில் நடிக்கத்தான் இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தேன். எனது கனவை டைரக்டர் ரஞ்சித் நனவாக்கி விட்டார். இப்போது கிடைத்துள்ள பாராட்டு இனிமேல் படத்திற்கும் படம் இன்னும் சிறப்பான நடிப்பை கொடுக்க வேண்டும் என்கிற உற்சாகத்தை எனக்குள் ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் அவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் துஷாரா விஜயன்.