நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் அறிமுகமாகும் படம் அழகிய கண்ணே. இதில் சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். பிரபு சாலமன் மற்றும் மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். காடன் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.அசோக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
சீனு ராமசாமியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஜயகுமார் இயக்குகிறார். விஜய்யின் நெருங்கிய உறவினரும், மாஸ்டர் பட தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதில் அவர் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்புகள் தற்போது நடந்து வருகிறது.
சீனு ராமசாமியின் படங்களில் விஜய் சேதுபதி நடித்தபோது அவருக்கு வசனங்கள் சொல்லிக் கொடுத்ததும் ஒரு உதவியாளர் போன்றும் இருந்தவர் இயக்குனர் விஜயகுமார். அந்த நன்றி கடனுக்காக இந்த படத்தில் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.