‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் சரித்திரப் படமான கல்கியின் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது. அங்கு சரித்திரப் புகழ் வாய்ந்த இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். கடைசி கட்ட படப்பிடிப்பை படம் நெருங்கி வருகிறது.
நேற்று இப்படத்தின் படப்பிடிப்புக்காக குவாலியரிலிருந்து இந்தூருக்கு ரயில் மூலம் இயக்குனர் மணிரத்னம், நடிகர் ரகுமான் உள்ளிட்ட படக்குழுவினர் பயணித்தனர். இன்று படத்தைப் பற்றிய அடுத்த அப்டேட் ஒன்றை ரகுமான் கொடுத்துள்ளார். 80, 90களில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த பாபு ஆண்டனி 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். அவருடைய படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
அது பற்றிய தகவலை ரகுமான் தெரிவித்துள்ளார். அவர், பாபு ஆண்டனி, ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோர் ஹோட்டலில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, “ஒரு நல்ல பயணம் எனது நெருங்கிய நண்பா. மீண்டும் இருவரும் ஒன்றாக நடித்தது மிகவும் மகிழ்ச்சியானது. பழைய நினைவுகளை மீண்டும் மகிழ்ச்சியுடன் நினைக்க முடிந்தது. இந்த சரித்திரப் படத்தில் நீயும் இருப்பது மகிழ்ச்சி. உனது எதிர்கால திட்டங்களுக்கு எனது வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.