துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சிம்பு மாநாடு படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது கிடைத்த கேப்பில் உருவான படம் ஈஸ்வரன். சுசீந்திரன் 22 நாளில் இயக்கிய இந்த படத்தில் சிம்புவுடன் பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா உள்பட பலர் நடித்திருந்தார்கள். திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். தமன் இசை அமைத்திருந்தார்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் பொங்கல் அன்று தியேட்டரில் வெளியானது. சுமாரன வரவேற்பைத்தான் படம் பெற்றது. என்றாலும் படத்தின் பட்ஜெட்டை கணக்கிடும்போது தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்த படம். கொரோனா கட்டுப்பாடுகள் வந்த பிறகு ஜூன் 12ம் தேதி டிஷ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்த நிலையில் படம் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. வருகிற 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.