பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் | 2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா |

சித்த மருத்துவர் கே.வீரபாபு எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும், ‛முடக்கறுத்தான்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இப்படத்திற்கு சிற்பி இசையமைக்க, பழனிபாரதி பாடல் எழுதுகிறார். இவர்கள் கூட்டணி நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் சேர்ந்துள்ளது.
வீரபாபு பேசியதாவது: சின்ன வயதிலேயே சினிமா மீது ஆர்வம் அதிகம். இந்தத் துறையிலும் சாதிக்க நினைத்தேன், அது நிஜமாகி உள்ளது. குழந்தைகளின் வாழ்க்கையை முடக்கும் கயவர்கள் பற்றிய கதையே ‛முடக்கறுத்தான்'. குழந்தைகளுக்கான ஒரு அமைப்பு, திட்டம் உருவாக்க வேண்டும் என்பதே என் ஆசை. குழந்தைகளுக்கான பல பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. அது இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.