மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
இஷ்டம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான ஸ்ரேயா, 2003ல் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் தமிழுக்கு வந்தார். அதையடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒருபெரிய ரவுண்டு வந்தவர் 2018ல் ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூவ் கோர்சேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ஸ்பெயினில் குடியேறிய ஸ்ரேயா, அங்கிருந்தபடியே அவ்வப்போது இந்தியா வந்து படங்களில் நடித்து வந்தார். தற்போது ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ஸ்ரேயா, தெலுங்கில் தயாராகும் ஒரு திரில்லர் படத்திலும் நாயகியாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதுதவிர சில வெப்சீரிஸ்களிலும் கமிட்டாகியுள்ளார்.
அந்தவகையில் நடிப்பில் மீண்டும் அதிகப்படியான ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ள ஸ்ரேயா, ஸ்பெயின் நாட்டில் இருந்து இடம்பெயர்ந்து மீண்டும் மும்பையில் குடியேறியுள்ளார்.