அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
காதலித்து, திருமணம் செய்து 4 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த சமந்தா - நாகசைதன்யா ஜோடி சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர். இது திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இவர்களின் பிரிவுக்கு பல வகையான காரணங்கள் சமூகவலைதளங்களில் றெக்க கட்டி பறந்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு நேரடியாக இதுவரை பதில் கொடுக்காமல் இருந்து வந்தார் சமந்தா.
இந்நிலையில் நேற்று தனது திருமணநாளில் சோகமான பதிவை பதிவிட்ட சமந்தா இன்று இன்ஸ்டாவின் ஸ்டோரி பக்கத்தில் சில வதந்திகளுக்கு பதில் கொடுத்துள்ளார். அதில், ‛‛தனிப்பட்ட நெருக்கடியில் உங்களின் உணர்ச்சிகள் என்னை மூழ்கடித்துள்ளது. என் மீது இறக்கம் காட்டிய அனைவருக்கும் நன்றி. அதேவேளையில் நான் ஒருவருடன் தொடர்பில் இருந்தேன், சந்தர்ப்பவாதி, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை, கருகலைப்பு செய்தேன் என்று என்னைப்பற்றி பொய்யான வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
விவாகரத்து என்பதே மிகவும் வேதனையான ஒன்று. அதிலிருந்து நான் மீண்டு வர வெகுநாட்கள் ஆகும். இதுஒருபுறம் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் என் மீதான தாக்குதல்கள் இடைவிடாது தொடருகின்றன. இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
இவ்வாறு சமந்தா பதிவிட்டுள்ளார்.