இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
நடிகை கேப்ரில்லா செல்லஸ் நடித்து வரும் சுந்தரி தொடர், தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த சீரியல் ஆரம்பித்து பல நாட்களாக அதன் எபிசோடுகள் சுவாரசியமின்றி டம்மியாக சென்று கொண்டிருந்தது. ஆனால், சமீபத்தில், நாயகனின் இரண்டு பொண்டாட்டி தில்லு முல்லு வெளிப்படும் வகையில் ஸ்பெஷல் எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், பலநாட்களாக டிஆர்பியில் நம்பர் 1-ல் இருந்த 'கயல்' தொடரை இரண்டாம் இடத்துக்கு தள்ளி, முதலிடத்தை 'சுந்தரி' தொடர் பிடித்துள்ளது.
இதனையடுத்து மூன்றாவது இடத்தை 'ரோஜா', நான்காவது இடத்தை 'வானத்தை போல', ஐந்தாவது இடத்தை 'கண்ணான கண்ணே' ஆகிய தொடர்கள் பிடித்துள்ளன. இதன் மூலம் தமிழ் சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பியில் முதல் 5 இடத்தை ஒரே டிவி சேனல் தக்க வைத்துள்ளது. விஜய் டிவி சீரியல்கள் கடந்த சில நாட்களாக சறுக்கல்களை சந்தித்து வருகிறது. விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி 6வது இடத்திலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 7வது இடத்திலும், நம்பர் 1 சீரியலாக வலம் வந்த பாரதி கண்ணம்மா தற்போது 8வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.