மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான சீரியல் 'எங்க வீட்டு மீனாட்சி'. இதில் ஜீவா, ஸ்ரித்தா சிவதாஸ், பூர்ணிமா பாக்யராஜ் என பல திரைபிரபலங்கள் நடித்து வந்தனர். காரைக்குடி வீடு, கூட்டுக் குடும்பம், படிக்காத ஹீரோ, டீச்சர் ஹீரோயின் என ஆரம்பத்தில் மிகவும் எதிர்பார்ப்பை இந்த தொடர் ஏற்படுத்தியிருந்தது. ஆனால், ஒளிபரப்ப தொடங்கியது முதல் கதையில் எந்த சுவாரசியமும் இல்லாமல் சென்றதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில், தற்போது இந்த தொடர் கிளைமாக்ஸை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வெறும் 119 பிசோடுகளே ஒளிபரப்பாகியுள்ள நிலையில் இந்த தொடரின் கிளைமாக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் சிதம்பரம் மற்றும் மீனாட்சிக்கு திருமணமாவது போல் காட்டப்பட உள்ளதால் திருமண காட்சிகளுக்கான சூட்டிங் நடைபெற்று வருகிறது.