ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் | 2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் |

சீரியல்களில் 'ரோஜா' தொடருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. மற்ற தொடர்களை போல் அல்லாமல் பாட்டு, ரொமான்ஸ், சண்டை என சினிமாவிற்கான மசாலா அம்சங்களுடன் சீரியலில் வித்தியாசமான முயற்சிகளை செய்து நேயர்களிடமும் சில நேரங்களில் வரவேற்பையும் சில நேரங்களில் விமர்சனங்களையும் பெற்றிருந்தது.
இந்நிலையில், ரோஜா தொடரானது தற்போது க்ளைமாக்ஸை எட்டியுள்ளது. இந்த செய்தியை அந்த சீரியலில் ஹீரோ, ஹீரோயினாக நடித்து வரும் சிபு சூரியன் மற்றும் ப்ரியங்கா நல்காரி வெளியிட்டுள்ளனர். சிபு சூரியன், 'அதிகமாக ரசிக்கப்பட்ட அர்ஜூன் கதாபாத்திரத்தை என்னை நம்பி எனக்களித்த சரிகமா நிறுவனத்துக்கு நன்றி. ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. விரைவில் உங்களை மீண்டும் சந்திப்பேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் ப்ரியங்கா நல்காரியும், 'என் வாழ்க்கையில 4 வருஷத்துக்கும் மேலான இந்த பயணத்தை மறக்கவே முடியாது. தமிழ் தெரியாம இங்க வந்த என்னை எல்லோரும் உங்க வீட்டு பெண்ணா ஏத்துக்கிட்டீங்க.உங்களோட இந்த அன்புக்கு நான் என்ன செய்யப்போறேன்னு தெரியல' என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்த ரோஜா தொடரானது கடந்த 4 வருடங்களில் 1200க்கும் மேலான எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிட்டதால் ரசிகர்கள் பலரும் ரோஜா மற்றும் அர்ஜூன் கதாபாத்திரத்தை இனி நாங்கள் அதிகமாக மிஸ் செய்வோம் என வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.