டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

பிரபல சின்னத்திரை நடிகை சரண்யா துராடி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்கிற நிகழ்ச்சியில் நடனமாடி அசத்தி வருகிறார். அதில், அண்மையில் ஒளிபரப்பான எபிசோடில் நாய்க்குட்டி போல் வேடமணிந்து நடனமாடியிருக்கிறார். முதலில் இது எளிதாக இருக்கும் என்று நினைத்த சரண்யாவுக்கு பயிற்சியின் போதே முட்டியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு ரத்தம் கசியும் அளவுக்கு வந்துள்ளதாம்.
இந்த அனுபவம் குறித்து மிகவும் உருக்கத்துடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சரண்யா, '5வது நாள் ஸ்டேஜ் பெர்பார்மன்ஸின் போது நாங்கள் எலிமினேட் ஆகிவிடுவோம்னு நினைச்சோம். அடுத்த 5 நிமிஷத்துக்கு முட்டின்னு ஒன்னு இல்லைன்னு நினைச்சிட்டு ஒரு நாய்க்குட்டியாவே மனசார நம்பி ஆடினேன். ஆடி முடிச்சு எழுந்து நின்னு பார்த்தா போட்டியாளர்கள், பார்வையாளர்கள் எழுந்து நின்னு கைத்தட்டுனாங்க. மாஸ்டர் கண்ணுல கண்ணீர். அன்னைக்கு கோல்டர் பெர்பார்மன்ஸ் ஜெயிச்சோம்' என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். சரண்யாவின் இந்த அர்ப்பணிப்பான நடனத்தை ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.