பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சினிமாவில் யார் போட்டிக்கு வந்தாலும் இப்போ இல்லை எப்பவுமே எனக்கு நான் போட்டி என பல படங்களில் நடிப்பு திறமையை நிரூபித்து, மாடலிங் துறையிலும் சாதித்து வரும் நடிகை சனம் ஷெட்டி மனம்திறக்கிறார்...
மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு எப்படி
மாடலிங் துறையை விட இப்போது சினிமாவில் ரொம்ப கவனம் செலுத்துகிறேன். சென்ற ஆண்டு கொேரானாவால நிறைய படங்கள் வரல, ஆனா இப்போ சில படங்கள் வருது. சினிமா துறை நல்லா இருக்கு.
'ஊமை செந்நாய்' என்ற வித்தியாசமான தலைப்புள்ள படத்தில் நடிக்கிறீர்கள்
படம் அமைதியா இருக்கும், முக்கிய விஷயங்களை பேசும். எனக்கு கண்ணால் பேசுவது போன்ற காட்சிகள் நிறைய இருக்கு. ஹீரோ மைக்கேலுக்கு டாக்டர் கேரக்டர். நான் மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கும் அமுதாங்குற கேரக்டர்ல மேக்கப் இல்லாமல் நடிச்சிருக்கேன்.
ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்கள்
தமிழ் சினிமாவில் இப்போது நிறைய மாற்றங்கள் வந்திருக்கு. ஜோதிகா, நயன்தாரா ஹீரோயின் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறாங்க, ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்கள் எனக்கும் வந்திருக்கு
இப்ப படங்கள் வாய்ப்பு எப்படி கிடைக்கிறது
அனைத்து துறைகளிலும் போட்டிகள் இருக்க தான் செய்கிறது, எனக்கு நானே போட்டியாக தான் நினைச்சுக்கிறேன். எனக்கு கிடைக்கும் கேரக்டர்களை சிறந்த முறையில் நடிக்க விரும்புகிறேன்
அடுத்து என்னென்ன படங்களில் நடிக்கிறீங்க
'எதிர்வினை ஆற்று', சிம்புவின் 'மகா' படத்தில் மகத்துக்கு ஜோடியா நடிச்சிருக்கேன்
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய பிரச்னை
என் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த பிரச்னைகள், அவமானங்கள், இழப்புகள் அதிகம். சினிமா பின்னணி இல்லாமல் நடித்து முன்னேறுவது ரொம்ப கஷ்டம். யார் என்ன விமர்சனம் சொன்னாலும், கனவுகள், லட்சியங்களில் இருந்து கீழே இறங்காமல் தைரியமா இருக்கணும். எல்லாருக்கும் திறமை இருக்கு. அதை வெளியே கொண்டு வரும் வாய்ப்புகள் குறைவு.
சமூக பிரச்னைகள் குறித்த கருத்து...
பள்ளி, கல்லுாரி மாணவிகளுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்து அடிக்கடி பேசணும், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி அவசியம். பெண்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, தகுந்த பாதுகாப்பு கொடுக்கணும். தண்டனைகள் கடுமையாக்க வேண்டும்.