திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு, ஈழத்தமிழர்கள் போராட்டம் குறித்த பின்னணியை சித்தரிப்பதாக எடுக்கப்பட்ட 'மேதகு' திரைப்படத்தின் கதாநாயகன் குட்டி மணி தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்தார்.
சொந்த ஊர் சிவகங்கை. அப்பா சேகர், அம்மா அமுதா. அப்பா ஜவுளி வியாபாரம் பார்க்கிறார். சிறு வயதில் இருந்து சினிமாவில் ரொம்ப ஆர்வமா இருந்தேன். அதிகமா படம் பார்ப்பேன். எனது நண்பர் பாரதி மூலம் குறும்படங்களில் நடித்து வந்தேன்.
சிறு வயதில் இருந்து சினிமாவில் ஆர்வம் உள்ளவன். நான் ஒரு டிரஸ்ட் வச்சிருக்கேன். அதன் மூலமாக ஏழை மாணவர்களுக்கு ஏதாவது உதவி செய்து கொண்டிருக்கிறேன். இந்த சமூகத்தில் நமது சிந்தனையை மக்களிடம் போய் சேர்க்கணும் என்றால் அது சினிமாவால் தான் முடியும் என்று நினைத்தேன். அதனால் சினிமாவை தேர்ந்தெடுத்து சினிமா காதலனாக ஆகிவிட்டேன்.
நண்பர் பாரதி என்பவர் மேதகு படத்திற்கு ஆடிஷன் நடப்பதாக கூறினார். அவரின் மூலமாக எனது புகைப்படத்தை ஆடிஷனுக்கு அனுப்பி வைத்தேன். என் போட்டோ ரிஜெக்ட் ஆயிடுச்சு.அதுக்கப்புறம் நண்பன் ஆசாத் மூலமாகத் தான் தஞ்சாவூர் ஆடிஷனுக்கு நேரில் சென்றேன். நான் ஒரு குறும்படத்திற்காக தாடியும் மீசையும் வைத்திருந்தேன். அப்டியே ஆடிஷன் சென்றதால் அங்கு இயக்குனர் என்னை பார்த்துவிட்டு முதல்ல போய் முடி வெட்டிட்டு ஷேவ் பண்ணிட்டு வரச் சொல்லி ஒரு உதவி இயக்குனரை என் கூட அனுப்பி வச்சாரு. கிளீன் ஷேவ் பண்ணி முடி வெட்டுனதுக்கு அப்புறம் என்னை பிடித்து போய் செலக்ட் பண்ணிட்டாரு. பிரபாகரன் கேரக்டரில் நடிக்க போறது நான் என்று அந்தப் படத்தில் நடிக்கிற வரைக்கும் எனக்கு தெரியாது.
படம் எடுத்து முடிச்சதுக்கு அப்புறம் ரிலீஸ் பண்றது மிகப் பெரிய விஷயமா இருந்துச்சு. ரிலீஸ் ஆனதுக்கப்புறம் உலக தமிழ் மக்கள் மத்தியில மிகப்பெரிய வரவேற்பு ஏற்படுத்தியது.என்னோட வாழ்க்கையில இந்த படம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இரண்டு விருதுகள் கிடைத்தன. நிறைய கதைகள் கேட்டுக்கிட்டு இருக்கேன். ஒரு நல்ல கதைக்காக காத்திருக்கேன்.இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் பயன் தரும் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இயக்குனர் வெற்றிமாறன், மாரி செல்வராஜ், ராம் கூட படம் பண்ண ஆசை. இயக்குனர் பாலா தான் என்னோட மிகப்பெரிய கனவு இயக்குனர் என்றார்.தொடர்புக்கு... 73736 77968