Advertisement

சிறப்புச்செய்திகள்

அன்பே வா, கொடி, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள் | லைட்டா காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் தமிழ் சினிமா ! | தமிழ் சினிமாவில் வசூலைக் குவித்த பார்ட் 2 படங்கள் | டெமாக்ரடிக் சங்கா அமைப்பிலிருந்து விலகுவதாக ரெஜினா அறிவிப்பு | கிங் 100 : தபு பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் சிறப்பு அப்டேட் | ரூ.634 கோடி மோசடி விவகாரத்தில் எனக்கு தொடர்பா....? : ஆதாரமில்லாமல் பேசாதீங்க - ஜனனி அசோக்குமார் | யஷ் குழந்தைகள் பெயர் பின்னால் உள்ள காரணம் | தி டார்க் ஹெவன்' கூட்டணியின் அடுத்த படம் 'தி லாஸ்ட் கேஸ்' | தமிழகத்தில் சினிமா டிக்கெட் கட்டணங்களை உயர்த்த கோரிக்கை | கவனம் பெறாத 'பாக்கெட் நாவல்' இசையமைப்பாளர் மாற்ற அறிவிப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

காத்திருப்பும், உழைப்பும் வெற்றிக்கான பார்முலா : தேசிய விருது பெற்ற எடிட்டர் கலைவாணன் பேட்டி

26 செப், 2026 - 06:57 IST
எழுத்தின் அளவு:
The-formula-for-success-is-waiting-and-working-National-Interview-with-award-winning-editor-Kalaivanan
Advertisement

காதலும், போர்களமும் ஒரே கோட்டில் பயணிக்கும், 'அமரன்' படம் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர், எடிட்டர் கலைவாணன். 'தினமலர்' நாளிதழுக்கு, அவர் அளித்த பேட்டி.

நீங்கள் கோவைக்காரரா? சினிமாவுக்கு சென்றது எப்படி?
பிறந்தது, வளர்ந்தது எல்லாமே போத்தனூர். பிளஸ்2 பொள்ளாச்சியில் படித்தேன். சினிமாவில் ஏதாவது ஒரு வேலையில் சேரலாம் என சென்னை சென்றேன்.எடிட்டர் ஏ.கே.பிரசாத் உதவியால் பிலிம் இன்ஸ்டிடியூடில் சேர்ந்தேன். எடிட்டர் ரூபனிடம் உதவியாளராக இருந்தேன். அவர் வெற்றிப் படங்கள் கொடுத்ததால், எனக்கும் பல தொடர்புகள் கிடைத்தன. இவ்வளவு வெற்றி படங்கள் கொடுப்பேன் என, கனவிலும் நினைக்கவில்லை.

அமரன் படத்திற்கு தேசிய விருது அறிவித்த போது என்ன நினைத்தீர்கள்?
முழுநேர எடிட்டராக எனக்கு அடையாளம் கொடுத்த படம் 'தும்பா'. அடுத்து சில படங்களில் வேலை செய்தேன். ஆனால், முதல் வெற்றிப்படம் அமரன். முதல் விருதே தேசிய விருதாக அமைந்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

விருதுக்கு பிறகு, உங்கள் பார்வை மாறியுள்ளதா?
பெரிய பொறுப்புணர்வு வந்துள்ளது. இனி எடிட்டிங்கை கூர்ந்து கவனிப்பார்கள். காட்சிகளை துல்லியமாகவும், பிழையின்றியும் எடிட் செய்ய வேண்டும் என்ற பொறுப்பு.

ஒருபுறம் போர், ஆக்சன் காட்சி; மறுபுறம் குடும்ப உணர்வு, காதல்... இரண்டையும் எப்படி சமன் செய்தீர்கள்?
நான் உதவியாளராக பணியாற்றிய, 'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்' போன்ற படங்களில் ஆக்ஷனும் இருக்கும், எமோஷனும் இருக்கும். அந்த அனுபவம்தான் உதவியது. தனியாக எந்த ஸ்டைலும் கிடையாது. கதை என்ன கேட்கிறதோ, அதற்கு ஏற்றவாறு எடிட் செய்ய வேண்டும்.

ஏஐ தொழில்நுட்பம் எடிட்டிங் துறையில் மாற்றம் ஏற்படுத்துமா?
அது ஒரு டெக்னாலஜி அப்கிரேட் மட்டுமே. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளுக்கு மாற்றாக வரலாம். எடிட்டிங் பணியை முழுமையாக மாற்ற முடியாது. அது ஒரு அச்சுறுத்தல் இல்லை.

சினிமாவுக்குள் வர விரும்பும் இளைஞர்களுக்கு சொல்ல விரும்புவது?
செய்யும் வேலையை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்தால் போதும்; அதற்கான பலன் நிச்சயம் தேடி வரும். சினிமாவை விட்டு போய்விடலாம் என நினைத்த போதுதான், 'அமரன்' வாய்ப்பு வந்தது. 'மெர்சல்' படத்தில் பணியாற்றிய போது, 'ரங்கூன்' பட புரோமோவுக்கு வேலை செய்தேன். அந்த அறிமுகத்தால் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி வாய்ப்பு அளித்தார்.

அடுத்த படம் என்ன?
அமரனை தொடர்ந்து கருப்பு படமும் பெரிய ஹிட். அக்.,1 ல் விஜய் சேதுபதியின் 'பத்தா' படம் ரிலீஸ். அடுத்து, தனுஷின் 'ஓம்' படத்திற்கான வேலை நடக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சினிமாவுக்கு வரும் வழி... நடிகை நயனா சாய்சினிமாவுக்கு வரும் வழி... நடிகை நயனா ... சினிமாவில் ஓடிக்கொண்டிருப்பதே பெரும் பரிசு: ஹென்சா 'பளீச்' சினிமாவில் ஓடிக்கொண்டிருப்பதே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap