தெலுங்கு ரசிகர்களின் முதல் தேர்வாகத் தொடரும் சூரியின் மண்டாடி | சந்தீப் கிஷன் திறமை இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை : ஜேசன் சஞ்சய் | கரீனா கபூர், பிருத்விராஜ் படத்துக்கு பாக்ஸ் ஆபீஸில் சுமாரான தொடக்கம் | நடிகை வடிவுக்கரசி பற்றி பரவிய வதந்தி : அவர் சொன்ன அடடே பதில் | ஜெயிலர் 2வில் திலீப்பாக சுராஜ் வெஞ்சாரமூடு | பூரி ஜெகன்நாதர் கோயிலில் கிடைத்த சமுத்திரக்கனி படத்தலைப்பு | ஆஸ்கர் போட்டியில் இளையராஜா இசையமைத்த இன்னொரு படம் | எப்போதும் பரிதாபத்துக்குரியவர்கள்... என்ன செய்யலாம் சின்ன பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களை? | தயக்கம் காண்பித்த மகிமா நம்பியார் : நன்றிகளை அடுக்கிய சூரி | ஒரே நேரத்தில் நாலு பட விழா : பரபரப்பான தமிழ் சினிமா |

'' என்ன தம்பி நம்ம மெடிக்கல் ஷாப்ல இந்த வாரம் பி.பி. மாத்திரைகள் வியாபாரம் பிச்சுக்கிட்டுப் போகுது?”
“ சினிமா ரிப்போர்ட்டர்ஸ் அதிகமா நடமாடுற ஏரிவாச்சே… பாவம், இந்த வாரம் மொத்தம் 11 படங்கள் பிரிவியூ பாத்து இருக்காங்க சார் ”
இந்த எகத்தாள உரையாடல், பிரிவியூ தியேட்டர்கள் அதிகமுள்ள கோடம்பாக்க ஏரியாவில் அடிக்கடி கேட்கக்கூடிய ஒன்றுதான்.
சமீபத்தில் 'டாக்சிக்', 'சர்தார் 2' என்று அடுத்தடுத்து இரு படங்களை தரிசித்து நோந்து வாழ்ந்து வருகிற ஜீவன்களுக்கு இந்த வாரம் இன்னும் கூடுதலாய் நொந்த வாரம்தான். யெஸ்… சில டப்பிங் படங்களுமாகச் சேர்த்து இந்த வாரம் ரிலீஸான படங்களின் எண்ணிக்கை ஒரு டஜன். அதில் பத்து சின்ன பட்ஜெட் படங்கள்.
இப்படங்களின் கதை என்ன, படம் எப்படி இருந்தது என்பது போன்ற ஏரியாவுக்குள் என்ட்ரி கொடுக்காமல், சும்மா டைட்டில்களை மட்டும் தெரிந்துகொள்வோம்.
1. என்ன விலை, 2. பீப், 3. டார்க் ஹெவன், 4. இ 1, 5. பாரிஸ் கபே, 6. ரவாளி, 7. லட்சியவாதி, 8. வள்ளிமலை வேலன், 9. கோல்டு கால், 10. நல்ல படம், 11. சண்டைக்காரி.
இப்பட்டியலில் கருணாஸ் நடித்த 'என்ன விலை', குரு சோமசுந்தரம் நடித்துள்ள 'பாரிஸ் கபே', விமல், ஸ்ரேயா காம்போவின் 'சண்டைக்காரி' தவிர்த்து மற்ற அனைத்துமே புதுமுகங்கள் நடித்துள்ள படங்கள்.
“ நல்ல படம்ணு டைட்டில் வச்சிருக்காங்களே… அந்தப் படமாவது நல்லா இருக்கா பாஸ் ?'' என்று கேள்வி கேட்கத் துடிப்பவர்களே,…
“வேணாம் அழுதுருவேன்” என்பதுதான் சினிமா விமர்சகர்களின் கோரஸ் குமுறல்.
வெள்ளியன்று ரிலீஸான இப்படங்களில் கருணாஸ் நடித்த 'என்ன விலை' மட்டும் ரொம்ப சின்ன விலைக்கு புக் ஆகி ஒன்றிரண்டு காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், மற்ற அனைத்துப் படங்களுமே சிங்கிள் டிஜிட்டில் ரசிகர்கள் ஆஜராகி ஷோ கேன்சல் ஆகி, ' கடல்லயே இல்லையாம்' கதைதான்.
இதில் விமல், ஸ்ரேயாவின் 'சண்டைக்காரி' ஏழெட்டு வருடக் காத்திருப்புக்குப்பின் ரிலீஸாகியிருக்கிறது என்கிற தகவலைக் கேள்விப்பட்டுப் படம் பார்த்தபோது, 'பருத்தி மூட்டை கொடோன்லயே இருந்திருக்கலாம்' என்றுதான் தோணுகிறது.
இவ்விதமாய் தமிழ் சினிமாவில் சிறுபட்ஜெட் படங்கள் மட்டும் வருடத்துக்கு 100 முதல் 150 வரை ரிலீஸாகின்றன. அவற்றில் 10 படங்கள் தேறுவதே கஷ்டம். மீதி நூத்திச் சொச்ச படங்களால் குளிர்காய்கிறவர்கள் மீடியேட்டர்கள், தியேட்டர் மேனேஜர்கள், போஸ்டர் அடிப்பவர்கள், போஸ்டர் ஒட்டுகிறவர்கள், பிரிவியூ தியேட்டர் உரிமையாளர்கள், டிஜிட்டல் புரமோட்டர்கள்.
இவர்களுக்குப் போனதுபோக, படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் கட்டியிருக்கும் கோவணம் கூட மிஞ்சாது என்பதுதான் பரிதாப நிலவரம்.
ஆக, தமிழ் சினிமாவில் எப்போதும் பரிதாபத்துக்குரிய ஜீவன்கள் நமது சிறு பட்ஜெட் படத்தயாரிப்பாளர்கள்தான். என்னத்துக்குத்தான் படம் எடுக்க வந்திருக்கிறோம் என்பது கடைசிவரை புரியாமல், கையிலிருக்கிற கடைசி துட்டுவரை படத்தில் போட்டு, பூஜை முதல் ரிலீஸ் வரை ஏகப்பட்ட நம்பிக்கை துரோகங்களை அடுத்தடுத்து எதிர்கொண்டு, இறுதியில், ரிலீஸுக்குத் தியேட்டர்கள் கிடைக்காமல் அவர்கள் அல்லாடுகிற கதை அவர்கள் எடுக்கிற படக்கதையை விட பரிதாபமானது.
நிலைமை இப்படி இருக்க, சில சமயங்களில் தங்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லாமல் ஒரே நேரத்தில் எழெட்டுப் பேர் ரிலீஸுக்குக் களம் இறங்கி ஆளுக்கு ஐந்தாறு தியேட்டர்களில் படங்கள் ரிலீஸாகி, அதைப் பார்க்க சிங்கிள் டிஜிட்டில் ஜனங்கள் வந்து ஷோ கேன்சலாவதும்தான் தொடர்ந்து நடந்து வருகிறது.
இடைப்பட்ட காலங்களில் இவர்கள் அனுபவிக்கிற ஒரே ஆனந்தம், பட புரமோஷன் நிகழ்ச்சிகளில், கோட், சூட் அணிந்து உற்றார், உறவினர்கள் புடைசூழ விழா மேடைகளில் உரையாற்றி அதை யூடியூப்களில் கண்டுகளிக்கிற சந்தோஷம்தான். மற்றபடி, வெள்ளித்திரைக்கு இப்படிப்பட்ட அதீத சிறுபட்ஜெட் பட ரிலீஸ்கள் எப்போதும் கருப்பு வெள்ளிதான்.
மெகா பட்ஜெட் தயாரிப்பாளகளே தங்களுக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொண்டு தனித்தனியாய் படங்களை ரிலீஸ் செய்ய முயலும்போது சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள் இப்படி கும்பலாய் தியேட்டர்களை முற்றுகையிட்டால் உங்கள் முதலீட்டில் அம்மஞ்சல்லியைக் கூட வீட்டுக்குக் கொண்டுபோக முடியாது என்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.
வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை கோடம்பாக்கத்தில் விரயமாக்கலாமா?




