பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
குடும்பமாக பார்க்கலாம் என்ற கேரண்டி தரக்கூடிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இந்த இயக்குநரும், நடிகருமானவர். திடீரென இவர் பெரிய முதலாளி வீட்டிற்குள் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் பேரைக் கெடுத்துக் கொள்ளாமல் வெளியில் வந்ததால் தப்பித்துக் கொண்டார்.
சமீபகாலமாக படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வரும் இவர், பெரிய முதலாளி வீட்டிற்கு செல்வதற்கு முன்னர் தமிழின் முன்னணி நாயகன் ஒருவரை இயக்குவதாக இருந்தார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் அவரது படத்தை இயக்குவார் எனப் பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி முடிந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகப் போகும் நிலையில், இன்னமும் அந்தக் குறிப்பிட்ட படம் பற்றிய அப்டேட் வராமல் இருப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
பட வேலைகள் தாமதம் ஆவதற்கு கொரோனா மட்டுமல்ல, நாயகன் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. நாயகன், வில்லன் என தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் நடித்து வரும் மக்களுக்குப் பிடித்தமான அந்த நடிகர், இந்தப் படத்திற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லையாம். அடுத்தாண்டாவது இவர்கள் இணைந்து படம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என இவர்களது காம்போவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.