முதல் ரூ.50 கோடி : விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி பதிவு | சண்டைக் காட்சியில் நடித்தபோது பாலகிருஷ்ணாவிற்கு காயம் | அதர்வாவுடன் நட்பை தொடர்வேன் : பிரீத்தி முகுந்தன் | மீண்டும் கதை நாயகியாக நடிக்கும் லிஸி ஆண்டனி | சாக்ஷி அகர்வாலின் பல ஆண்டு கனவு நிறைவேற்றம் | அதிரடி மாற்றங்களுடன் மீண்டும் வரும் அவென்ஞ்சர்ஸ் : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | பிளாஷ்பேக் : சிவாஜியை தேடிச் சென்று சந்தித்த தலாய் லாமா | பிளாஷ்பேக் : தியேட்டரில் தோற்று, வரலாற்றில் வென்ற படம் 'கப்பலோட்டிய தமிழன்' | முதல் நாள் வசூல் : 'கூலி' சாதனை முறியடிக்கப்படுமா ? | விருதுகளை தேடி செல்பவர் அல்ல தனுஷ் : இயக்குனர் கஸ்துாரி ராஜா |

கொரோனா இரண்டாவது அலை தாக்கம் குறைந்துள்ள நிலையில், பாலிவுட் சினிமா மறுபடியும் தியேட்டர்களில் தங்களது வெளியீட்டை துவங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது முதல் பெரிய படமாக ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள சூர்யவன்ஷி என்கிற படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டியுள்ள இயக்குனர் ராஜமவுலி.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராஜமவுலி கூறும்போது, சூர்யவன்ஷி படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள், இந்த அசாதாரண சூழலில் கிட்டத்தட்ட ஒரு வருடம் படத்தை ரிலீஸ் செய்யாமல் காத்திருந்து தியேட்டர்கள் திறந்த பின்பே ரிலீஸ் செய்துள்ள தயாரிப்பாளரின் மன உறுதியை பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார். இந்த படத்தை ரிலையன்ஸ் என்டர்டைன்மெண்ட் சார்பில் ரோஹித் ஷெட்டி தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.