23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
பிரபல பாலிவுட் நடிகை நிகிதா தத்தா. கபீர் சிங் படம் மூலம் புகழ்பெற்றவர். லெகர் ஹம் தீவானா தில் படத்தில் அறிமுகமான இவர் கோல்ட், லஸ்ட் ஸ்டோரி, மஸ்கா, தி பிக் புல் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ராக்கெட் கேங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
மும்பை பந்த்ரா பகுதியில் இரவு நேரத்தில் நடைபயிற்சிக்கு சென்றபோது வழிப்பறி திருடர்கள் அவரை வழிமறித்து தாக்கி அவரது உயர்ரக செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து நிகிதா இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது: பந்த்ரா பகுதியில் இரவு 7.45 மணிக்கு நான் நடந்து சென்றேன். அப்பொழுது என் பின்னால் பைக்கில் வந்த இரண்டு பேரில் ஒருவர் என் தலையில் அடித்தார். இதில் நான் தடுமாறியதை பயன்படுத்திக் கொண்டு பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தவன்என் கையில் இருந்த செல்போனை பறித்துவிட்டான். கண் இமைக்கும் நேரத்தில் இது நடந்துவிட்டது. நான் எதுவும் செய்யும் முன்பே அவர்கள் தப்பிவிட்டனர்.
அந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் எனக்கு எதுவுமே புரியவில்லை. நிலைமையை உணர்ந்து நான் பைக்கின் பின்னால் ஓடுவதற்குள் அவர்கள் வெகுதூரம் சென்றுவிட்டனர். நான் உதவி கேட்டதை பார்த்து அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவர் அந்த இரண்டு பேரை பின்தொடர்ந்தும் பலனில்லை. இந்த சம்பவம் குறித்து பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்று நினைக்கிறேன். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் இப்படி போய்விட்டது. என்று எழுதியிருக்கிறார்.