நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. அவரது கணவர் ரன்வீர் சிங்குடன் நடித்து வெளிவந்த '83' படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறாமல் தோல்வியைச் சந்தித்தது.
தற்போது இரண்டு ஹிந்திப் படங்களிலும், பிரபாஸ் உடன் ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் 63 மில்லியன் பாலோயர்களை வைத்துள்ள தீபிகா நேற்று கொஞ்சம் ஆபாசமான 'ரெட் ஹாட்' புகைப்படங்கள் சிலவற்றையும், ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
“சூடான சிவப்பு மிளகாய் ஆக இருக்க ஆசை” என அந்த வீடியோவுக்கு 'கேப்ஷன்' கொடுத்துள்ளார் தீபிகா. போட்டோக்களைப் பார்த்தால் பாலிவுட் நாயகி போல இல்லாமல் ஹாலிவுட் நாயகி போல இருக்கிறார். அதனாலோ என்னவோ 16 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக்குகளை அள்ளித் தெளித்துள்ளார்கள்.