துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பாலிவுட் ஹீரோவான விவேக் ஓபராய் தமிழில் ரத்த சரித்திரம், விவேகம் ஆகிய படங்களில் நடித்த பிறகு தென்னிந்திய அளவில் அதிகம் தேடப்படும் மோஸ்ட் வான்டட் வில்லன் நடிகராக மாறிவிட்டார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் முதன்முறையாக இயக்குனராக மாறி இயக்கிய லூசிபர் படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக நடித்தார் விவேக் ஓபராய். அந்த நட்பின் அடிப்படையில் தற்போது ஷாஜி கைலாஷ் டைரக்ஷனில் தான் நடித்து வரும் கடுவா என்கிற படத்திலும் விவேக் ஓபராயை வில்லனாக்கி அழகு பார்த்திருக்கிறார் பிரித்விராஜ்
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக, பிரித்விராஜ் விவேக் ஓபராய்க்கு விருந்தளித்து உபசரித்து விடைகொடுத்து அனுப்பி வைத்துள்ளார். பிரித்விராஜ் மற்றும் அவர் மனைவியுடன் விவேக் ஓபராய் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இந்த தகவலை வெளியிட்டுள்ளார்