பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ஆலியா பட். அவர் 'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாகத்தான் நடித்தார் என்றாலும் படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமே இல்லாமல் இருந்தது. மேலும், ஒரு துணை நடிகைக்குரிய கதாபாத்திரத்தையே உருவாக்கி இருந்தார் ராஜமவுலி. இதனால், மிகவும் வருத்தத்தில் இருந்த ஆலியா பட், 'ஆர்ஆர்ஆர்' படம் சம்பந்தப்பட்ட சில படங்களை தனது இன்ஸ்டாவிலிருந்து நீக்கினார். பின்னர் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் ஜுனியர் என்டிஆர் அடுத்து நடிக்க உள்ள ஒரு புதிய படத்திற்கு ஆலியா பட் தான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. ஆனால், அப்படத்திலிருந்து ஆலியா விலகிவிட்டதாகச் சொல்லுகிறார்கள். அது மட்டுமல்ல இனி தெலுங்குப் படங்களில் நடிக்கும் எண்ணமே இல்லை என ஆலியா சொல்லிவிட்டாராம். அவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்து வெளிவந்த ஹிந்திப் படமான 'கங்குபாய் கத்தியவாடி' படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்தது. எனவே, இனி ஹிந்தியில் மட்டுமே நடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் ஆலியா.