சினிமாவுக்கு வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் | பெய்டு வியூஸ் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு அதிரடி அறிவிப்பு | தனுஷிற்கு ஹிந்தி தெரியுமா... தெரியாதா...? | மணிரத்னத்தை விமர்சிப்பதா ? தெலுங்கு இயக்குனர் காட்டம் | அஜித், ஆதிக் காம்போ உறுதி | கவின் நடித்துள்ள 'கிஸ்' படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது! | 'லியோ' படத்தில் உயிரிழந்த மடோனாவின் கேரக்டர் 'பென்ஸ்' படத்தில் உயிர் பெறுகிறதா? | சூர்யா 46வது படத்தின் பாடல் பயங்கரமாக வந்திருக்கு! - ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்ட தகவல் | சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி! கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ | உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பில் பவன் கல்யாண் |
பரபரப்புக்கு புகழ்பெற்ற கங்கனா, நடிப்பு என்று வந்துவிட்டால் அதிலும் சாதனை படைப்பார். நிஜ வாழ்க்கையில் சிறந்த பக்திமான். கங்கனா தற்போது தாகட் என்ற படத்தில் நடித்துள்ளார். இது ஒரு அதிரடி ஆக்ஷன் ஹீரோயின் படம். இந்த படத்தில் அவருடன் அர்ஜுன் ராம்பால், திவ்யா தத்தா நடித்துள்ளனர். வருகிற 20ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தின் புரமோசன் பணியில் ஈடுபட்டிருக்கும் கங்கனா, பாலிவுட் நடிகர்கள் தனக்கு உதவவில்லை என்று சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் கங்கனா நேற்று திடீரென திருப்பதி வந்தார். மெரூன் கலர் பட்டுப்புடவை அணிந்து அதிகாலையில் சாமி தரிசனம் செய்தார்.
சுவாமி தரிசனத்தை தொடர்ந்து ஆலயத்திலுள்ள ரங்கநாயகி மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்தப் பிரசாதங்களைப் அதிகாரிகள் வழங்கினர்.
சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தான் நடித்து வெளிவரவுள்ள தாகட் திரைப்படம் வெளியாக உள்ளதை அடுத்து வெற்றி பெற வேண்டுமென சாமி தரிசனம் செய்தேன். ரசிகர்களாகிய உங்களுடைய ஆசீர்வாதம் எனக்கு வேண்டும். தாகட் தயாரிப்பாளர் தீபக்முகுத்ஜி, அவரது மனைவி கிருஷ்ணா முகுத்ஜி மற்றும் சில நண்பர்களும் என்னுடன் வந்திருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை செய்த விஷ்ணு மஞ்சுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தெய்வீக தரிசனத்திற்குப் பிறகு ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். என்றார்.