விக்ரம் 65வது படத்தை இயக்கும் ‛பார்க்கிங்' இயக்குனர் | நாகார்ஜுனா Vs ஜுனியர் என்டிஆர் - கூடுதல் பலத்தைக் கொடுக்கப் போவது யார் ? | சீக்கிரம் சசி உடன் மீண்டும் ஒரு படம் : விஜய் ஆண்டனி | இப்பவே கூலி ரூ.200 கோடி லாபமா...? | சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பரத் தேர்வு | இரண்டாவது வாரத்தில் தெலுங்கு திரையுலக ஊழியர்கள் ஸ்டிரைக் | உடல் மெலிந்து உருமாறிய தோற்றத்தில் அதிர்ச்சி அளித்த பிரபல குணச்சித்திர நடிகர் | மம்முட்டியை பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை : பெண் தயாரிப்பாளர் விளக்கம் | ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரகுமான் | நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிப்பு : சுதீப், ரிஷப் ஷெட்டி வருத்தம் |
பாலிவுட்டில் இயக்குனராக, தயாரிப்பாளராக வலம் வருபவர் கரண் ஜோஹர். கல்யாண வீடுகளில் தவறாமல் வாழை மரம் கட்டுவது போல பாலிவுட்டின் முக்கிய சினிமா நிகழ்வுகள் அனைத்திலும் தவறாமல் இடம் பெற்று வருபவர் தான் கரண் ஜோஹர். அதுமட்டுமல்ல மிகப்பெரிய படங்கள் வெளியாகும்போது இவர் நடத்தி வரும் காபி வித் கரண் என்கிற நிகழ்ச்சியில் அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் தவறாமல் கலந்து கொள்வதும் வழக்கம்.
இந்த நிலையில் காபி வித் கரண் சீசன்-7 நிகழ்ச்சியின் கடைசி எபிசோட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய கரண் ஜோஹர், “சமீபத்தில் விக்கி கவுஷல், கத்ரினா கைப் திருமணம் நடைபெற்றபோது எனக்கு அழைப்பு அனுப்பவில்லை.. சமீப காலமாகவே பாலிவுட்டில் நடைபெறும் சில திருமண நிகழ்வுகளில் எனக்கு அழைப்பு அனுப்பப்படுவதில்லை. இதோ இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நீங்கள் கூட அதுபற்றி இங்கே எதையும் பேசவில்லை” என அங்கே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த சில நட்சத்திரங்களைப் பார்த்து தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார் கரண் ஜோஹர். மேலும் இயக்குனர் அனுராக் காஷ்யப்புக்கும் அந்த திருமணத்தில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பவில்லை என்பதை கேட்ட பின்னரே என் மனம் கொஞ்சம் அமைதியானது என்றும் கூறியுள்ளார் கரண் ஜோஹர்.