தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்கும் பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்கோத்ராவும் காதலித்து வருகிறார்கள். இருவரும் தங்களது திருமணம் பற்றி கரண் ஜோஹர் நடத்தும் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார்கள்.
அவர்களது திருமணம் வரும் ஜனவரி மாதத்தில் நடைபெறலாம் என முன்னர் தகவல் வெளியானது. ஆனால், கியாரா தற்போது படப்பிடிப்புகளில் பிஸியாக நடித்து வருவதால் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திருமணத்தை நடத்த காதல் ஜோடி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகைகள் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்து வருகிறார்கள். இந்த வருடம் ஆலியா பட், ரன்பீர் கபூர் ஜோடி திருமணம் செய்து குழந்தையும் பெற்றுவிட்டார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் கியாரா அத்வானி நடித்து வரும் 'ஆர்சி 15' படத்திற்கான பாடல் காட்சி ஒன்று நியூசிலாந்தில் படமாகி வந்தது. நேற்றுதான் அப்பாடல் காட்சிக்கான படப்பிடிப்பை முடித்துள்ளார்கள்.