தேனீ வாயில் புகுந்ததால் கரிஷ்மா முன்னாள் கணவர் மரணம்? | ஆயிரமாவது பாடலை எழுதிய மதன் கார்க்கி | புலவர் பெருந்தலை சாத்தனாராக நடித்த கொட்டாச்சி | விஜயகாந்த் மகனுக்கு விஜய், லாரன்ஸ் உதவினார்களா? | ஒரே நேரத்தில் 5 படங்களா? : சிம்பு விளக்கம் அளிப்பாரா | இன்று ஸ்ரீலீலாவுக்கு பிறந்தநாள் : ரசிகர்கள் வாழ்த்து | தக் லைப் : ஓடிடி விலை, மறுபரிசீலனை பேச்சுவார்த்தை? | நானியை சந்தித்த 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் | ‛கலைமாமணி' பட்டம் பெற்ற நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார் | டாப் இயக்குனர்களுடனான கூட்டணி சரிவு : கவனிப்பாரா கமல்ஹாசன் ? |
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபீராகம் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த ஹிந்தித் திரைப்படம் 'பதான்'. இப்படம் வசூலில் புதிய சாதனைகளை அடுத்தடுத்து படைத்து வருகிறது.
தயாரிப்பு நிறுவனத்தின் இன்றைய அதிகாரப்பூர்வ அறிவிப்புப்படி இதுவரையில் 953 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்திய அளவில் 593 கோடியும், வெளிநாடுகளில் 360 கோடியும் வசூலித்துள்ளது. 1000 கோடி வசூலைத் தொட இன்னும் 47 கோடிதான் தேவை. இந்த வார இறுதிக்குள் அந்த சாதனையையும் இந்தப் படம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1000 கோடி வசூலைக் கடக்கும் போது இப்படம் அதிக வசூலைப் பெற்ற இரண்டாது ஹிந்திப் படம் என்ற சாதனையைப் படைக்கும். இரண்டாவது இந்தியப் படம் என்ற சாதனையைப் படைக்க 'கேஜிஎப் 2' படத்தின் 1200 கோடி, 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 1200 கோடி வசூலை முறியடிக்க வேண்டும். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.