தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுட்டேலா, ஹிந்தி மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் தமிழ் என தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தமிழில் வெளியான லெஜெண்ட் படத்தில் அண்ணாச்சி சரவணனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் இளம் நடிகர் அகிலுக்கு ஜோடியாக ஏஜென்ட் என்கிற படத்தில் நடித்துள்ளார் ஊர்வசி ரவுட்டேலா. இந்த படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் சினிமா விமர்சகர் ஒருவர், ஏஜென்ட் படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடைபெற்றபோது நாயகன் அகில், ஊர்வசி ரவுட்டேலாவை துன்புறுத்தினார் என்றும், அகில் பக்குவம் இல்லாத நடிகர் என்றும் அவருடன் பணியாற்றுவது வசதி குறைவாக இருந்தது என்று ஊர்வசி ரவுட்டேலா கூறியதாகவும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் அந்த நபர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு ஊர்வசி ரவுட்டேலாவின் கவனத்திற்கு வந்ததும் கோபமான அவர், இது முற்றிலும் தவறான செய்தி என்று கூறியதுடன், அவர்மீது அவதூறு வழக்கு தொடர்ந்து நோட்டிஸ் அனுப்பியுள்ளார். மேலும் அந்த நபர் பற்று ஊர்வசி கூறும்போது, “உங்களுடைய கருத்துக்கள் ரொம்பவே கடுமையாக இருக்கின்றன. நீங்கள் என்னுடைய அதிகாரப்பூர்வமான மக்கள் தொடர்பாளர் அல்ல. உங்களுடைய பக்குவமற்ற செயலால் என்னையும் என்னுடைய குடும்பத்தையும் ரொம்பவே வருத்தப்பட வைத்து விட்டீர்கள் என்று கூறியுள்ளார்.