தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரபல பாலிவுட் நடிகையான கஜோல், தமிழில் 1997ம் ஆண்டு அரவிந்த்சாமி , பிரபுதேவா நடித்த மின்சார கனவு என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு 20 ஆண்டுகள் கழித்து தனுஷ் நடிப்பில் சவுந்தர்யா ரஜினி இயக்கிய வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தில் நடித்தார்.
இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, ‛‛இந்தியாவில் மாற்றம் என்பது மெதுவாகத்தான் நிகழும். இன்னமும் நாம் நம்முடைய பாரம்பரியங்கள் மற்றும் செயல் முறைகளிலேயே முற்றிலுமாக மூழ்கி இருக்கிறோம். அதோடு படிப்பறிவு இல்லாத அரசியல் தலைவர்கள் நம் நாட்டில் உள்ளார்கள். அவர்கள் தான் நம்மை வழிநடத்தி செல்கிறார்கள். அவர்களில் பலருக்கு கண்ணோட்டம் என்பதே இல்லை. அது கல்வியின் மூலம் தான் கிடைக்கும். அதனால் அனைவருக்கும் கல்வி மிக முக்கியம்'' என்று கூறியிருந்தார் காஜோல்.
அவரது இந்த கருத்து சோசியல் மீடியாவில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கம் கொடுத்து உள்ளார் கஜோல்.
அதில், ‛‛அந்த நிகழ்ச்சியில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேச விரும்பினேன். மற்றபடி, எந்த ஒரு அரசியல் தலைவரையும் குறிப்பிட்டு நான் பேசவில்லை. யாரையும் புண்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. நம்மை சிறப்பாக வழி நடத்தும் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள்'' என்று அவர் அந்த பதிவில் தெரிவித்து சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.