பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து கொண்டே தொழில் அதிபர் மனைவி ஒருவரிடம் 200 கோடி மோசடி செய்ததாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடியில் அவருக்கு பிரபல பாலியுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உடந்தையாக இருந்தார் என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் தற்போது ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் ஜாக்குலின் தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தனது நிதி பிரச்சினை சீராகும் என்றும், அதனால் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம். அவர் ஒரு கோடி ரூபாய் பிணையத் தொகை செலுத்தி விட்டு செல்ல வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டது.