2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன். தமிழில் 'ஆளவந்தான்' படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தார். இதுதவிர அன்பே, சாது உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார். பாலிவுட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 'கேஜிஎப் 2' படத்தில் பிரதமர் கேரக்டரில் நடித்தார். உறவினர் அனில் டாண்டனை திருமணம் செய்து கொண்ட இவருக்கு 3 மகள்கள். இதில் மூத்த மகள் ராஷா சினிமாவில் அறிமுகமாகிறார்.
தெலுங்கில் ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கு பிறகு அவர் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷா டாண்டன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர பான் இந்தியா படமாக தயாராக இருக்கும் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதுகுறித்து ரவீனா கூறும்போது 'ராஷாவுக்கு எல்லாவிதமான சுதந்திரமும் கொடுத்திருக்கிறேன். அவள் படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் படிப்பு பாதிக்காத வகையில் சினிமாவிலும் நடிப்பாள். அது அவளது விருப்பம்” என்றார்.