2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து 'மேயாத மான்' படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். பின்னர் 'கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், யானை, திருச்சிற்றம்பலம், ரத்னம், டிமான்டி காலனி -2' என பல படங்களில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர் தற்போது 'டிமான்டி காலனி-3' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் நடிகைகள் தாங்கள் காதலில் விழுந்தாலும் அந்த செய்தி வெளியானால் மார்க்கெட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சீக்ரெட்டாக வைத்திருப்பார்கள்.
ஆனால் பிரியா பவானி சங்கரோ, கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே ராஜவேல் என்பவரை தான் காதலித்து வருவதை ஆரம்பத்திலேயே அறிவித்தார். அதோடு கடந்த சில மாதங்களாக அவர் காதலரை பிரேக் அப் செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அது வதந்தி என்பதை கூறும் வகையில், தற்போது காதலருடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையப் பக்கத்தில் வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி உள்ளார் பிரியா பவானி சங்கர்.