'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

தென்னிந்தியத் திரைப்படங்களின் தாக்கத்தால் பாலிவுட் சினிமாவின் முகம் முற்றிலும் மாறிப் போய்விட்டது. குறிப்பாக தெலுங்குப் படங்களான 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், புஷ்பா', கன்னடப் படமான 'கேஜிஎப் 2' ஆகிய படங்களின் பெரும் வெற்றி ஹிந்தித் திரையுலகத்தின் ரசனையையும் சேர்த்து மாற்றிவிட்டது. சமீபத்தில் வெளியான 'கல்கி 2898 ஏடி' படம் கூட 250 கோடி வசூலை ஹிந்தியில் பெற்றுள்ளது.
அப்படியான கமர்ஷியல் படங்களாக பிரம்மாண்டமாக எடுக்கப்படும் ஹிந்திப் படங்கள்தான் அங்கு வசூல் சாதனை புரியும் நிலைமை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதற்கு உதாரணமாக 'பதான், ஜவான், அனிமல்' ஆகிய படங்களைச் சொல்லலாம். ஒரு சில தரமான படங்கள் கூட குறைவான வசூலுடன் மட்டுமே வெற்றி பெற முடிகிறது.
அக்ஷய்குமார் உள்ளிட்ட சில நடிகர்களின் படங்கள் தொடர்ந்து வசூலில் தடுமாறி வருகின்றன. அக்ஷய் தொடர்ந்து தோல்வியை மட்டுமே கொடுத்து வருகிறார். அஜய் தேவன் நடித்து இந்த ஆண்டில் வெளிவந்து பாராட்டைப் பெற்ற 'மைதான்' படம் கூட வசூலைக் குவிக்கவில்லை. அவர் நடித்து வந்த 'சைத்தான்' படம் மட்டும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இந்நிலையில் அஜய் தேவகன் நடித்து நேற்றுமுன்தினம் வெளிவந்த 'அரோன் மெய்ன் கஹான் தம் தா' படம் முதல் நாள் வசூலாக வெறும் 2 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 15 வருடங்களில் ஒரு முன்னணி நாயகனின் படத்திற்கான குறைவான வசூல் இது என்கிறார்கள். அக்ஷய் குமார் நடித்து வெளிவந்த 'சர்பிரா' படம் கூட இரண்டரை கோடி வசூலித்ததாம்.
இப்படியே தொடர்ந்து சோகத்தை சந்தித்து வரும் பாலிவுட்டை மீட்கப் போவது யார் ?.




