துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
புதுடில்லி : பிரபல போஜ்புரி பாடகியும், நாட்டுப்புற கலைஞருமான சாரதா சின்கா, 72, உடல்நலக்குறைவு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார்.
பீஹாரைச் சேர்ந்த சாரதா சின்ஹா, தன் நாட்டுப்புறப் பாடல்களால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். இவர், போஜ்புரி மற்றும் மைதிலி ஆகிய மொழிகளில் நாட்டுப்புறப் பாடல்களை பாடியுள்ளார். அவருக்கு நம் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கடந்த 2017ம் ஆண்டு சாரதா சின்ஹாவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அதற்கான சிகிச்சைகளை அவர் மேற்கொண்டார். இந்நிலையில், திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு காலமானார்.
சாரதா சின்ஹா மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.