2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

மலையாளத்தில் சமீபகாலமாக தனது குரலுக்காக ரசிகர்களிடம் பிரபலமாகி வருபவர் ரேப்பர் வேடன். இவரது இசை நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். அப்படி சமீபத்தில் காசர்கோடு பேக்கல் பீச்சில் நடைபெற்ற திருவிழாவின் ஒரு பகுதியாக இவரது இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நிகழ்ச்சியில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதால் நெரிசல் ஏற்பட்டு பலருக்கு மூச்சு திணறலும் காயங்களும் ஏற்பட்டன. பலர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. வந்திருந்த ரசிகர்கள் பலர் நடந்தே வீடு திரும்புவதற்காக அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தின் வழியாக நடந்த போது அதில் ஒரு ரசிகர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இன்னொரு ரசிகர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரேப்பர் வேடன் நடத்தும் இசை நிகழ்ச்சிகளில் எல்லாம் இதுபோன்று அதிக கூட்டம் கூடுவதும் அதனால் ஏதாவது சலசலப்பு சர்ச்சை உருவாவதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது.