நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
தமிழ் இயக்குனரான ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் ஹிந்திப் படம் 'சிக்கந்தர்'. இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
வெளியான 24 மணி நேரத்தில் இந்த டீசர் யுடியூப் தளத்தில் 43 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. ஹிந்தியில் இதுவரை வெளியான டீசர்களில் அதிகப் பார்வை பெற்ற டீசர் என்ற சாதனைதான் அது.
இதற்கு முன்பு வெளியான படங்களில் ஷாருக்கான் நடித்து வெளிவந்த 'டங்கி' படத்தின் டீசர் 36 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையை 'சிக்கந்தர்' முறியடித்துள்ளது.
டீசரைப் பொறுத்தவரையில் இந்தியப் படங்களில் பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சலார்' டீசர் 83 மில்லியன் பார்வைகளைப் பெற்று நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.
'சிக்கந்தர்' டீசர் தற்போது 53 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.