படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு சீரான இடைவெளிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கதாநாயகியாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். சமீப நாட்களாகவே மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிக்கும் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக ஒடிசாவின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான மரியூபன்ச் சவு என்கிற நடனத்தை கற்றுக் கொண்டுள்ளார் பிரியங்கா சோப்ரா. பிரபல நடந்த கலைஞரான விக்கி பார்தியா தான் பிரியங்கா சோப்ராவுக்கு இந்த நடனத்தை கற்றுக்கொடுத்துள்ளார்.
பிரியங்கா சோப்ராவுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு அவருடன் பணியாற்றிய அனுபவங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் விக்கி பார்த்தியா. இது குறித்து அவர் கூறும்போது, “பிரியங்கா சோப்ராவுடன் பணி புரிந்தது உண்மையிலேயே சிறப்பான அனுபவம். அவர் ரொம்பவே துறுதுறுப்பான, வேடிக்கையான, பலமான, தன்னை சுற்றி இருக்கும் அனைவரையும் அன்பாக பார்த்துக் கொள்ளும் ஒரு நபர். நடன ஒத்திகையின் போதும் படப்பிடிப்பில் நடன காட்சிகளை படமாக்கும் போதும் அவருடைய எனர்ஜியை பார்க்கும் போது நமக்கு உந்து சக்தியாக இருக்கிறது. தன்னுடைய அனைத்து விதமான கடின உழைப்பையும் அவர் கொடுத்திருக்கிறார்” என்று பாராட்டியுள்ளார்.




