பிளாஷ்பேக்: சமூகப் பட பாணியில் வந்து, சாதனை புரிந்த ஒரு பக்தித் திரைப்படம் | எதிர்மறை விமர்சனங்களால் துல்கருடன் இணைந்து நடிப்பதை தவிர்த்தேன் ; ஐஸ்வர்ய லட்சுமி | மாளவிகா மோகனனுக்கு பதில் வாமிகா கவி | 46 வருடம் முன்பு தான் நடித்த பட டைட்டிலிலேயே மீண்டும் நடிக்கும் மம்முட்டி | புஷ்பா இயக்குனர் படத்துக்காக உடல் எடையைக் குறைக்கும் ராம் சரண் | ஹீரோவாக அடுத்த வெற்றியைப் பெறுவாரா சூரி? | 20 ஆண்டுகளுக்கு பின் பிரபாஸ் பட பாடலை வைரலாக்கிய சீன நடனக்கலைஞர்! | அரசன், மஞ்சணத்தியை பெரிய அளவில் எதிர்பார்க்கும் பிரியங்கா மோகன் | இசையமைப்பாளர் ஆனது எப்படி? பாடகி கெனிஷா கொடுத்த விளக்கம் | தேசிய திரைப்பட விருதுகள், டில்லிக்கு வெளியே…. |

முன்னணி பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே, டங்கி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர். தற்போது அவர் கதை எழுதி தயாரித்துள்ள வெப் தொடர் 'பிரித்தம் அண்ட் பெட்ரோ'. முன்னா பாய் தொடரில் சர்க்யூட் கதாபாத்திரத்தில் நடித்த அர்ஷத் வர்சி, ஹிரானியுடன் மீண்டும் இணைகிறார். அவர் பெட்ரோவாக நடிக்கிறார். இவருடன் வீர் ஹிரானி பிரிதம் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
பாதாள லோக் மற்றும் ஸ்கூல் ஆப் லைஸ் டார்க் த்ரில்லர் தொடர்களையும், த்ரீ ஆப் அஸ் போன்ற சோகமான காதல் கதைகளையும் இயக்கிய அவினாஷ் அருண் இதனை இயக்கி உள்ளார். போமன் இரானி, மோனா சிங்கும் நாயகிகளாக நடிக்கிறார்கள். விக்ராந்த் மாஸி வில்லனாக நடிக்கிறார். வருகிற ஜூலை 3 அன்று ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது.