'சொல்லாமலே' கிளைமாக்ஸ், 'பூ' வாழ்வியல், 'பிச்சைக்காரன்' கரு, 'நுாறுசாமி' சேதி.. இயக்குனர் சசியை மறக்க முடியுமா? | முன்னணி இளம் ஹீரோயின் யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே கடும் போட்டி | தீபாவளி ரிலீசுக்கு வரிசைகட்டும் படங்கள் | ஒரே வாரத்தில் இரண்டு படங்களில் பிரியங்கா மோகன் | 7 மில்லியன் லைக்குகளைப் பெற்ற தீபிகா படுகோனே 'பிரக்னன்சி போட்டோஸ்' | நிவேதிதா சதீஷ் திருமணம்: நீண்ட நாள் காதலரை மணக்கிறார் | 'வைல்ட் தமிழ்நாடு': வன ஆவணப் படம் வெளியானது | கருப்பட்டி: மனைவி கொலையை துப்பறியும் கணவனின் கதை | பிளாஷ்பேக்: எம்ஜிஆரின் கிருஷ்ணன் - குசேலன் உறவு | பிளாஷ்பேக்: திருட்டு கதைக்கு 2 தேசிய விருது |

நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் 'ஆன் ஆர்டினரி மேன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் அவரின் தோழி மற்றும் இந்த படத்தை ரவியுடன் இணைந்து தயாரிக்கும் கெனிஷா.
இசையமைப்பாளர் ஆனது குறித்து கெனிஷா கூறுகையில், ''என் திறமையின் மூலமே வாய்ப்பை பெற விரும்பினேன். தொடக்கத்தில் எனக்கு இதில் இணையும் எண்ணம் இல்லை. இந்தத் திரைக்கதை அத்தனை அற்புதமாக இருந்ததால், அவருக்கு மிகச் சிறந்த இசையமைப்பாளர் அமைய வேண்டும் என்பது எனக்கு மிக முக்கியமானதாக இருந்தது. அதில் சமரசம் செய்து கொள்ள நான் விரும்பவில்லை. ஆனால், நாம் தயாராக இருப்பதை விடவும் நேரம் நமக்காகக் கனிந்து வரும்போது வாய்ப்புகள் உருவாகும் என நினைக்கிறேன்; அதுதான் நடந்தது. நான் படத்திற்குள் வந்தேன்.
முதலில் மூன்று சாம்பிள் பாடல்களை உருவாக்கினேன். அந்த பாடல்களைக் கொடுத்ததும், அவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ரவி மோகன் இயக்கும் படத்தில் பணியாற்றுவது மிகப்பெரிய பொறுப்பு, முற்றிலும் வித்தியாசமான இசை ஒன்றை விரும்பினார். தலைப்பு மட்டுமே 'ஆன் ஆர்டினரி மேன்' என்று இருக்கும், மற்றபடி எல்லாமே அசாதாரணமானது. எது நன்மை பயக்கும் என்பதைப் பார்க்க நான் பல புதிய வகைகளை ஆராய வேண்டியிருந்தது. இசை ஒருபோதும் திரைப்படத்தை மிஞ்சவோ அல்லது அதன் தரத்தைக் குறைக்கவோ கூடாது என்று நான் நம்புகிறேன்.
கெனிஷா என்றால் தெளிவான நீர் என்று பொருள். கெனிஷாவைப் பிரதிபலிக்கும் ஒன்று எனக்குத் தேவைப்பட்டது. அத்துடன் ஓர் சுயாதீனக் கலைஞர் (indie artist) மற்றும் திரைப்பட இசையமைப்பாளர் என்ற நிலைகளுக்கு இடையே வேறுபாட்டைக் காட்ட ஒரு ஆடம்பரமான மேடைப் பெயரையும் விரும்பினேன். அதனால்தான் முதலில் படத்தின் இசையமைபாளர் என்ற பெயரில் 'ஹைட்ரோ' என்பதைத் தேர்ந்தெடுத்தேன்.
அந்தக் காலகட்டத்தில் எனது பெயரைச் சுற்றி நிறைய எதிர்மறையான விஷயங்கள் இருந்தன. ஆனால் இப்போது, நாம் உழைக்கும்போது அந்தப் படைப்பில் நமது சொந்தப் பெயர் இருப்பதே மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். நல்லதோ கெட்டதோ, உங்கள் பெயரே அதை எதிர்கொள்ளட்டும். அதனால், இறுதியாக எனது சொந்தப் பெயரிலேயே செல்வது என்று முடிவு செய்தோம், இப்போது பட இசையமைப்பாளர் கெனிஷா என பெயர் வருகிறது'' எனக் கூறியுள்ளார்.




