Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் 2026 : 1000 மில்லியன் வசூல் கடந்த 4 படங்கள் | வாரணாசி படத்திலிருந்து மேலும் ஒரு வீடியோ கசிவு | ராமாயணா படம் சர்வதேச அளவில் 50,000 திரையரங்குகளில் ரிலீஸ் | விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதல்வர் விஜய் மனைவி சங்கீதா : வழக்கும் முடித்து வைப்பு | முதலமைச்சர் விஜயின் செயல்பாட்டை பாராட்டிய மாதவன் | பாலகிருஷ்ணாவின் 111வது படத்தை பெரிதும் நம்பும் காஜல் அகர்வால் | பூச்சி முருகனிடம் நலம் விசாரித்த ஸ்டாலின் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் | 'ஸ்பைடர்மேன்' - வரிசைப் படங்களின் வசூல் என்ன? | 16 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பாரடைஸ்' டீசர் | 'ராமாயணா' - ஒரு பில்லியன் பார்வைகள் கடந்த டிரைலர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நமது உண்மை... நமது வரலாறு... ராமாயணா டிரைலர் வெளியானது : மிரட்டும் பிரமாண்டம்

30 ஜூலை, 2026 - 11:18 IST
எழுத்தின் அளவு:
Our-truth...-Our-history...-Ramayana-trailer-released-Awe-inspiring-grandeur
Advertisement

இந்தியாவின் புராண காவியமான ராமாயணம் பல்வேறு தொடர்களாக, படங்கள் வெளியாகி உள்ளன. ஹிந்தியில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் ‛ராமாயணா'. ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, லட்சுமணனாக ரவி தூபே, ராவணனாக யஷ், ஹனுமனாக சன்னி தியோல், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற ஏஆர் ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹேன்ஸ் ஜிம்மர் இசையமைத்துள்ளனர். சுமார் ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் இந்தியாவில் அதிக பொருட்ச் செலவில் இரு பாகங்களாக தயாராகி உள்ளது. நிமித் மல்கோத்ரா தயாரித்துள்ளார்.

முதல் பாகம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகள் முழு வீச்சில் துவங்கி உள்ளன. இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. குறிப்பாக உலகளவில் ஹாலிவுட் படத்தை சோனி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் டிரைலர் ஜூலை 24ம் தேதி வெளியாக வேண்டியது. இந்நிலையில் இன்று(ஜூலை 30) அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் 4:15 மணியளவில் டிரைலரை வெளியிட்டனர். ஹிந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் டிரைலரை வெளியிட்டுள்ளனர். 4 : 09 நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலர் பிரமாண்டமாக உள்ளது. குறிப்பாக கிராபிக்ஸ் காட்சிகள் அற்புதமாக உள்ளன.

ராவணின் அசுர எழுச்சி, மூன்று உலகங்களையும் ஆளுவதில் டிரைலர் தொடர்கிறது. அப்படியே ராமர் பிறப்பு, சீதையுடன் திருமணம், வனவாசம் புறப்படுதல், லட்சுமணனால் சூர்ப்பனகை மூக்கு அறுபடுவது, தங்கைக்காக ராமரை அழிக்க முற்பட்டு சீதையை ராவணன் கடத்துவது, மனைவியை மீட்க, ராவணனை அழிக்க ராமர் புறப்படுவது என டிரைலர் விரிகிறது. நான்கு நிமிட டிரைலரில் ஓரளவு ராமாயணத்தின் கதையை சொல்லி விட்டனர்.
எல்லோருக்கும் தெரிந்த கதை தான் என்றாலும் அதை காட்சிப்படுத்தும் விதம் என்பது புதுமையாக உள்ளது. இந்த டிரைலரை பொருத்தமட்டில் முழுக்க கிராபிக்ஸ் மற்றும் விஎப்எக்ஸ் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. குறிப்பாக படத்தின் டிரைலரில் காண்பிக்கப்பட்டுள்ள செட்டுகள், அதற்கு பொருத்தமான நடிகர்கள் என அவ்வளவு அழகாக உள்ளன. அதேசமயம் ஹனுமன் பற்றி ஒரு சிறிய காட்சி கூட டிரைலரில் இடம் பெறாதது குறையாக இருப்பதாக ரசிகர்கள் பெரும்பாலும் சுட்டிக் காட்டி உள்ளனர்.

5 மொழிகளில் வெளியான டிரைலரில் ஹிந்தி பதிப்புக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான 6 மணிநேரத்தில் சுமார் 50 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. அதற்கடுத்து தெலுங்கு 10 லட்சமும், கன்னடம் 8 லட்சமும், தமிழ் 4.5 லட்சமும், மலையாளம் 1 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சகோதரரை தேற்றுவதற்காக ரியாலிட்டி ஷோ வீட்டுக்கு சென்ற சல்மான் கான்சகோதரரை தேற்றுவதற்காக ரியாலிட்டி ஷோ ... ஹாலிவுட்டில் கால் பதிக்கும் வித்யூத் ஜம்வால் ஹாலிவுட்டில் கால் பதிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap