Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாய் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அப்டேட் | மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா | "இனியாவது திருமணம் செய்வீர்களா ?" - 51 வயது பாலிவுட் நாயகி சொன்ன பதில் | ஏழு வருடத்திற்கு பிறகு 'கும்பலாங்கி நைட்ஸ்' இயக்குனரின் புதிய படம் பூஜையுடன் துவக்கம் | விழா மேடையில் ரவீனா டாண்டனை நாய் கடிக்க முயன்றதால் பரபரப்பு | மோகன்லாலின் மகள் அறிமுகப் படம் ரிலீஸ்: மம்முட்டி வாழ்த்து | காவி உடை சர்ச்சையில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர் | ஹாலிவுட் 2026 : 1000 மில்லியன் வசூல் கடந்த 4 படங்கள் | வாரணாசி படத்திலிருந்து மேலும் ஒரு வீடியோ கசிவு | ராமாயணா படம் சர்வதேச அளவில் 50,000 திரையரங்குகளில் ரிலீஸ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

ஒரு 'மதுரை நாயகன்' உதயமாகிறான்... நடிகர் யஷ்வந்த்ராஜ்

02 ஆக, 2026 - 04:30 IST
எழுத்தின் அளவு:
Actor-Yashwanth-Raj-Exclusive-Interview
Advertisement

என்னடா... தினமும் ஆடிஷனுக்கு போயிட்டு வர்றான்; எப்போ நடிக்கப் போறான் என்ற கேள்வியை பலரும் கேட்டிருக்கலாம். ஆனால் அந்த ஆடிஷன்கள் தான் இன்று மதுரையில் இருந்த யஷ்வந்தை பிரபல வெப்சீரிஸின் கதையின் நாயகனாக நடிக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

மதுரையில் இருந்து சினிமா கனவுடன் சென்னைக்கு சென்ற இந்த இளைஞரின் பயணம், ஒரே நாளில் நடந்த அதிசயம் அல்ல; யுடியூப் தொடர்கள், குறும்படங்கள், சிறு கதாபாத்திரங்கள் என படிப்படியாக முன்னேறி, இன்று 'வதந்தி' சீசன் 2 தொடரில் 'முடக்கத்தான் மணி என்னும் கதை நாயகனாக இடம்பெற்றுள்ளார்.

தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் நம்மிடம் பகிர்ந்தது..

அம்மா அமிர்தலட்சுமி, அப்பா கார்த்திகேயன் காதல் திருமணம் என்பதால் ஆரம்பத்தில் இருவீட்டாரும் எதிர்ப்பு காரணமாக உறவினர் வீட்டிற்கு செல்ல முடியாது; நேரம் கிடைக்கும் போதெல்லாம் சினிமா பார்க்க தியேட்டர்களுக்கு மட்டுமே செல்வோம். அப்படி தான் எனக்குள் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது. குடும்ப சூழ்நிலையால் பிளஸ் 2 படித்த பின்பு இரு ஆண்டுகள் கிராபிக் டிசைனராக வேலைக்கு சேர்ந்தேன். பின் அந்த அனுபவத்தை குறிப்பிட்டு சென்னையில் விஷூவல் கம்யூனிகேஷன்ஸ் படிப்பில் சேர்ந்தேன்.

சென்னையில் உடன் படித்த நண்பர்களுடன் குறும்படங்கள் நடித்து அதன் மூலம் வாய்ப்பு தேடினேன். நாங்கள் எடுக்கும் குறும்படங்களுக்கு டப்பிங் செய்ய ஸ்டூடியோ செல்வதற்கு கூட பணம் இருக்காது. தங்கியுள்ள அறையின் ஜன்னல்களை மூடி, தலையணை, போர்வைகளை சுவர்களில் அடுக்கி எதிரொலி வராமல் டப்பிங் செய்வோம்.  என் சினிமா ஆசை வீட்டில் தெரிந்தால் உடனே மதுரைக்கு கூப்பிட்டுப்பார்கள். சினிமாவில் சாதித்த பிறகுதான் வீட்டில் சொல்ல வேண்டும் என முடிவு செய்தேன்.

ஆரம்பத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக தினமும் ரூ.250 முதல் ரூ.300 வரை சம்பளம் கிடைக்கும். பெரிய சம்பளம் இல்லை. ஆனால் அன்றாட செலவுகளை சமாளிக்க உதவியது.

'ஜெயிலர்' படத்தின் பாடல் காட்சியில் ரஜினிகாந்துடன் தியேட்டரில் அமர்ந்திருக்கும் காட்சி கிடைத்தது. திரையில் அவுட் ஆப் போகஸில் தான் வருவேன். ஆனாலும், அந்தக் காட்சியை நண்பர்கள் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து 'நம்ம பையன் வந்துட்டான்' என சந்தோஷப்பட்டபோது, நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற உந்துதல் அதிகமானது.

யாராவது உதவி இயக்குநர் கண்ணில் பட வேண்டும்; கேமராமேன் பார்த்தால்கூட போதும்; வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ஷூட்டிங் ஸ்பாட்டை சுற்றுவோம். 'நீங்கள் போங்கள்' என்று சொன்னாலும், அங்கேயே இருப்போம். அந்தக் காத்திருப்புதான் இன்று இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

'வதந்தி' சீசன்-2 மதுரை பகுதிகளில் நடக்கும் கதை. இதன் ஆடிஷனில் வேறு கதாபாத்திரத்துக்கான வசனங்கள் கொடுத்தார்கள். அதில் மதுரை வட்டார மொழியில் நன்றாக நடித்ததால், இக்கதை நாயகனான 'மணி' கதாபாத்திரத்துக்கான வசனத்தை நடிக்கச் சொன்னார்கள். நான் மணி கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போகிறேன் என சொன்னவுடன் என்னால் நம்ப முடியவில்லை. இயக்குநர் ஆண்ட்ரூ லுாயிஸ் 'வதந்தி' சீரிஸ் மூலம் எனக்கு வாய்ப்பை மட்டும் தரவில்லை; வாழ்க்கையையே கொடுத்தார் என்பேன்.

என் மதுரை வட்டார மொழி உச்சரிப்புகளை மாற்றச் சொல்லவில்லை. அதையே கதாபாத்திரத்தின் பலமாக மாற்றினார். நான் சொன்ன சிறிய ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டார். ஒரு புதிய நடிகருக்கு அதைவிட பெரிய நம்பிக்கை வேறு என்ன இருக்க முடியும்.

இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். ஆடிஷனில் தோல்வி வந்தாலும் முயற்சியை மட்டும் கைவிடாதீர்கள். ஒரு நாள் நமக்கான கதவு நிச்சயமாக திறக்கும் என உற்சாகமாக பேசி முடித்தார் யஷ்வந்த்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அவரவர் வாழ்வின் அனுபவங்களே அறிவுரைகள்! நடிகர், தயாரிப்பாளர் நிகில் நம்பிக்கைஅவரவர் வாழ்வின் அனுபவங்களே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap