அன்பே டயானா முதல் மைக்கேல் ஜாக்சன் பயோபிக் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | ரிலீசிற்கு முன்பே 'ஏ' சான்றிதழ் கிடைக்கும் என 'ஸ்பிரிட்' இயக்குனர் ஆரூடம் | குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மாதுரி தீட்சித் | தாமதமாகும் பென்ஸ் : தாடி எடுக்க முடியாத விரக்தியில் நிவின்பாலி | இப்படி தான் சினிமா எடுக்குறாங்களா? பிரமாண்ட தோற்றத்தை உருவாக்கும் சிறிய நுணுக்கங்கள் | 'சந்திரோல்சவம்' : மீண்டும் ஒரு மோகன்லால் படம் ரீ ரிலீஸுக்கு தயார் | டாக்சிக் முதல்நாளில் ரூ.150 கோடி வசூல் | சன்னி லியோன் மீதான பண மோசடி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | மூத்த தெலுங்கு நடிகர் ஜி.வி.நாராயண ராவ் மரணம் | ஒருபோதும் மாற மாட்டேன் - பிரியா பவானி சங்கர் |

90களில் பாலிவுட்டில் ஸ்ரீதேவிக்கு இணையாக முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மாதுரி தீட்சித். ஒரு கட்டத்தில் சினிமாவை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு குடும்ப வாழ்க்கையில் நுழைந்தார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் திரையுலகில் நுழைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் சின்னத்திரை உலகிலும் முதன்முறையாக ஒரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்குவதன் மூலம் என்ட்ரி கொடுக்கிறார் மாதுரி தீட்சித். இந்த நிகழ்ச்சிக்கு 'கோன் ஹொனார் குரோர்பதி' என பெயர் வைத்துள்ளனர்.
ஆனால் இது அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் பழைய 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சி அல்ல.. இது வேறு.. இந்த நிகழ்ச்சியை மராத்தியில் தொகுத்து வழங்க இருக்கிறார் மாதுரி தீட்சித். மக்களுடைய கதைகள் மற்றும் கனவுகள் மூலமாக அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் தனக்கு நீண்ட காலமாக இருந்ததால், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்புக்கொண்டதாக அவர் கூறியுள்ளார். ஒரு நடிகையாக தன்னை கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்த ரசிகர்கள், இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது இயல்பான மற்றும் தன்னிச்சையான மறுபக்கத்தை பார்க்க முடியும் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.