'சர்தார்-2' தோல்விக்கு பின் தெலுங்கு படத்தில் கவனம் செலுத்தும் கார்த்தி! | அஜித் நடிக்கும் 'டேர் டெவில்' 2027 கோடையில் வெளியாக வாய்ப்பு! | மனீஷ் சர்மா இயக்கத்தில் நடிக்கும் சாரா அர்ஜுன் | பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் வெற்றி ரகசியத்தை பகிர்ந்த பஹத் பாசில்! | ரணபாலி படத்தின் 130 நாள் படப்பிடிப்பு நிறைவு | ஸ்ரீதேவியின் சென்னை சொத்து பிரச்சனை : மத்தியஸ்தம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு | மகனுக்கு வழிவிட்ட தந்தை | அர்ஜுன்தாஸ் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது | அருள்நிதி படத்திற்கு தடைகேட்டு தயாரிப்பாளர் வழக்கு | பிளாஷ்பேக் : பாடலுக்காக உருவான கதை |

வளர்ந்து வரும் மலையாள இளம் நடிகை அஹானா கிருஷ்ணா. 'ஞான் ஸ்டீவ் லோபஸ், லூக்கா, பதினெட்டாம் படி, லோகா சாப்டர் 1: சந்திரா' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் நிவீஷ் ரவியை கடந்த 10 வருடமாக காதலித்து வந்தார். நிவீஷ் ரவி, கிங் ஆப் கோதா, லக்கி பாஸ்கர், லோகா சாப்டர் 1: சந்திரா, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இவர்கள் திருமணம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதையொட்டி நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் ரிஷப் ஷெட்டி, துல்கர் சல்மான் உள்பட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அஹானா கிருஷ்ணா, நிமிஷ் ரவியைத் தனது 20வது வயதில் சந்தித்ததாகவும் 10 வருடங்கள் காதலித்து 30வது வயதில் திருமணம் செய்து கொண்டதாகவும் பதிவிட்டுள்ளார்.