அந்த நிகழ்வு நடக்கும்போது ரஜினி நிச்சயம் ஒரு கோடி தருவார் : லதா ரஜினிகாந்த் | வேறு யாராவது இருந்தால் பிச்சிட்டு ஓடி இருப்பாங்க : தன்ஷிகாவை புகழ்ந்த விஷால் | ஹாய் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அப்டேட் | மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா | "இனியாவது திருமணம் செய்வீர்களா ?" - 51 வயது பாலிவுட் நாயகி சொன்ன பதில் | ஏழு வருடத்திற்கு பிறகு 'கும்பலாங்கி நைட்ஸ்' இயக்குனரின் புதிய படம் பூஜையுடன் துவக்கம் | விழா மேடையில் ரவீனா டாண்டனை நாய் கடிக்க முயன்றதால் பரபரப்பு | மோகன்லாலின் மகள் அறிமுகப் படம் ரிலீஸ்: மம்முட்டி வாழ்த்து | காவி உடை சர்ச்சையில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர் | ஹாலிவுட் 2026 : 1000 மில்லியன் வசூல் கடந்த 4 படங்கள் |

சினிமா பிரபலங்கள் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்து கொள்வது காலம் காலமாக நடந்து வருகிறது. காதல், கல்யாணம், விவாகரத்து என அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை ஹிந்தி நடிகரான அமீர்கான் சமீபத்தில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டது பரபரப்பாகப் பேசப்பட்டது.
தற்போது 'சுப்பிரமணியபுரம்' படத்தின் கதாநாயகி தெலுங்கு நடிகை ஸ்வாதி, இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். 'மத் ஆப் மது' படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் நகோடி என்பவருடன் நடந்த திருமணம் குறித்து இன்ஸ்டா தளத்தில் இருவரும் இணைந்து பதிவிட்டுள்ளனர்.
2018ம் ஆண்டு விகாஸ் வாசு என்ற பைலட் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு இந்தோனேசியா நாட்டில் வசித்து வந்தார். அவர்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். தனது கணவருடனான திருமணப் புகைப்படங்கள் அனைத்தையும் அவர் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கினார்.
நேற்று (ஜுலை 8) ஸ்வாதிக்கும், ஸ்ரீகாந்த் நகோடிக்கும் ஹைதராபாத்தில் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.





