Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யாவின் 47வது படம் 'சீன்': நவ.,6ல் ரிலீஸ் | நடிகர் பிரபு நடிக்கும் நகைச்சுவை படம் 'அழகிய லைலா' | தாய்மையை எதிர்நோக்கும் சமந்தா! என் வாழ்க்கை முற்றிலும் மாறுவதற்கு நான் தயார்!! | 'பௌசி' ரிலீஸ் ஒத்திவைப்பு? ரிலீசுக்கு தயாராகும் துல்கர் சல்மான்- நாக சைதன்யா படங்கள்! | ரவிதேஜாவின் 'இருமுடி' நெட்பிளிக்ஸில் எப்போது வெளியாகிறது? | ஹிந்தி பற்றிய கருத்து: மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார் | ஜெர்மனியில் நடந்த அதிசயம்: இளையராஜா சொன்ன தகவல் | 'சொல்லாமலே' கிளைமாக்ஸ், 'பூ' வாழ்வியல், 'பிச்சைக்காரன்' கரு, 'நுாறுசாமி' சேதி.. இயக்குனர் சசியை மறக்க முடியுமா? | முன்னணி இளம் ஹீரோயின் யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே கடும் போட்டி | தீபாவளி ரிலீசுக்கு வரிசைகட்டும் படங்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அந்த நிகழ்வு நடக்கும்போது ரஜினி நிச்சயம் ஒரு கோடி தருவார் : லதா ரஜினிகாந்த்

08 ஆக, 2026 - 11:48 IST
எழுத்தின் அளவு:
Rajinikanth-will-definitely-give-one-crore-when-that-event-happens-Latha-Rajinikanth
Advertisement

'மக்கள் மேடை' அமைப்பு சார்பில் பாரத சேவா இணையதள தொடக்க விழா சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்றது. ஶ்ரீ தயா அறக்கட்டளையின் தலைவர் லதா ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலம் முழுவதும் முன்னெடுக்கப்பட உள்ள சமூக நலத்திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. மேலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் பயன்பெறும் வகையில் 'மக்கள் மேடை' இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த், “இந்த மக்கள் சேவை 45 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஒவ்வொரு செங்கல்லாக அமைப்பை கட்டியுள்ளோம். இந்தியாவுக்கு ஒரு புதிய கல்வி முறையை தொடங்கியுள்ளோம். தொடர்ந்து சமூக நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும்” என்றார்.

பல ஆண்டுகளாக தாங்கள் மேற்கொண்டு வரும் பணிகளை அதிகளவிலான மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கிலேயே 'மக்கள் மேடை' இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “நாட்டுப்பற்று எல்லாவற்றையும் விட பெரியது” என்றும் கூறினார்.

காவிரி இணைப்புத் திட்டம் தொடர்பாக 2002ம் ஆண்டு காலத்தில் ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார். ரஜினிகாந்த் கடந்த காலத்தில் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த லதா ரஜினிகாந்த், “ இது ஒரு அரசியல் கேள்வி, காவிரி இணைப்புத் திட்டம் எந்த நிமிடம், எந்த வேளையில் நடக்கிறதோ, அப்போது ரஜினிகாந்த் கண்டிப்பாக செய்வார். ரஜினிகாந்த் 100 சதவீதம் எனக்கு ஆதரவு அளிக்கிறார். அவருடைய ஆதரவை விட அவருடைய ஆசீர்வாதம் எங்களுக்கு முக்கியம்” எனத் தெரிவித்தார்.

'மக்கள் மேடை' இணையதளம் சமூக நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதற்கான தளமாக மட்டுமா அல்லது பொதுமக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் தளமாகவும் செயல்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த லதா ரஜினிகாந்த், “இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. மக்கள் பிரச்னைதான் அரசாங்க பிரச்னை. அரசாங்கத்திடம் கொண்டு சேர்க்க வேண்டிய நிலைமை வந்தால், அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்” என்று தெரிவித்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வேறு யாராவது இருந்தால் பிச்சிட்டு ஓடி இருப்பாங்க : தன்ஷிகாவை புகழ்ந்த விஷால்வேறு யாராவது இருந்தால் பிச்சிட்டு ... பிளாஷ்பேக் : தோல்வி படத்தை வெற்றி படமாக்கிய ஏவி மெய்யப்பன் பிளாஷ்பேக் : தோல்வி படத்தை வெற்றி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap