அரசியலுக்கு வருகிறேனா? ரவிமோகன் சொன்ன விளக்கம் | மோகன்லாலின் 'அதிமனோகரம்' படப்பிடிப்பு நிறைவு | கரீனா கபூருக்கு டப்பிங் குரல் கொடுக்கும் பார்வதி | தியேட்டரில் கிளாடியேட்டர்ஸ் டிரைலர் | முதல் இடத்தை நோக்கி முன்னேறுகிறாரா மமிதா பைஜூ? | பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் | குழந்தை தான் முக்கியம், பிக்பாஸ் முக்கியமல்ல : ஆடை வடிமைப்பாளர் ஜாய் கிரிசில்டா | ரஜினியின் ஜெயிலர் 2 வில் திருத்தமா? | மோகன்லாலின் ‛ஆபரேஷன் கங்கா' | இம்மார்ட்டல் படத்தின் புரொமோஷனில் பங்கேற்காதது ஏன்? - கயாடு லோகர் கொடுத்த விளக்கம் |

நெல்சன் இயக்கத்தில் தற்போது ரஜினி நடித்துள்ள படம் ஜெயிலர் 2. அக்டோபர் 15ல் திரைக்கு வரும் இப்படத்தில் சில மாற்றங்களைச் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, தமிழகத்தில் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளால் சில சிக்கல்களை தவிர்ப்பதற்காக, படத்தின் சில காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் படமாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எந்த குறிப்பிட்ட காட்சிகள் மாற்றப்படுகின்றன என்பது தெளிவாக தெரியாவிட்டாலும், இந்த மாற்றங்கள் சத்தமின்றி செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஜெயிலர்-2 படத்தில் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, ரம்யா கிருஷ்ணன், வித்யாபாலன், யோகிபாபு, மிர்னா மேனன், மிதுன் சக்ரவர்த்தி, மோகன்லால், சிவராஜ்குமார், விஜய்சேதுபதி என பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் ஒரு பெண் வில்லி கதாபாத்திரம் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், மலையாள நடிகை அன்னா ரேஷ்மா ராஜன் அந்த வேடத்தில் நடித்துள்ளார். மேலும், ஹிருத்திக் ரோஷன் இதில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.