துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பிரபல பாலிவுட் இயக்குனர் ரோனி ஸ்க்ரூவாலா தயாரிக்கும் புதிய பாலிவுட் படத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். மராத்தி இயக்குனர் தேஜஸ் தியோஸ்கர் இயக்கும் இந்த படம் காமெடி கலந்த சமூக படமாக தயாராகிறது. இதில் ரகுல் ப்ரீத்தி சிங் காண்டம் பரிசோதனையாளராக நடிக்கிறார்.
இந்த கேரக்டரில் நடிக்க அனன்யா பாண்டே, சாரா அலிகான் இருவரையும் தான் முதலில் அணுகினார்கள். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். ரகுல் ப்ரீத்தி சிங் கதையையும், படத்தில் வரும் காட்சிகளையும் கேட்டுவிட்டு நடிப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
இதுதவிர மே டே, தேங் காட், அட்டாக், டாக்டர்ஜி, சர்தார் கா கிராண்ட் சன் ஆகிய பாலிவுட் படங்களில் ரகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகிறார்.